சென்னை:வர்த்தக நேரங்களில், வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதில், எந்த தடையும் இருக்கக் கூடாது என, அனைத்து கிளைகளுக்கும், பாங்க் ஆப் பரோடா வங்கி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
இது குறித்து, அதன் கிளைகளுக்கு, பரோடா வங்கி அனுப்பிய சுற்றறிக்கை:வர்த்தக நேரத்தில், வங்கி கிளைகளின் பிரதான வாயில் பூட்டி இருக்கிறது. இது, வாடிக்கையாளர்கள் மத்தியில், வங்கி மூடியிருப்பதாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த செயல், இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலுக்கு முரணாக இருக்கிறது.
எனவே, வங்கிக் கிளைகள் அனைத்தும், வங்கியின் வர்த்தக நேரம் குறித்த அறிவிப்பை, கிளைகளுக்கு உள்ளேயும், வெளியிலும் வைக்க வேண்டும். ஊழியர்கள் அனைவரும், வர்த்தக நேரம் துவங்கும், 15 நிமிடங்களுக்கு முன், வருகை தர வேண்டும்.எந்த கவுன்டர்களிலும், தடையில்லாமல் சேவை வழங்க வேண்டும்.
வர்த்தக நேரம் முடியும் முன், வாடிக்கையாளர்கள் கிளைக்கு வந்தாலும், அவர்களுக்கு சேவை வழங்க வேண்டும்.உணவு இடைவேளை என, எந்த கவுன்டர்களிலும் அறிவிப்பு பலகை வைக்கக் கூடாது. ஊழியர்கள், அதற்கேற்ப இடைவேளையை சரிசெய்து கொள்ள வேண்டும். இதன் வாயிலாக, வாடிக்கையாளர்களுக்கான சேவையில், எந்த பாதிப்பும் இருக்கக் கூடாது. அனைத்து கிளைகளும் இதை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE