பொது செய்தி

இந்தியா

பிரிட்டன் பயணியரை கண்டறிய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை

Updated : டிச 25, 2020 | Added : டிச 23, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி :பிரிட்டனில் இருந்து வந்த பயணியரை கண்டறியும் பணியில், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.ஐரோப்பிய நாடான, பிரிட்டனில் இருந்து, மத்திய பிரதேச தலைநகர் இந்துாருக்கு, 33 பேர், கடந்த, 15 நாட்களில் வந்துள்ளனர். இவர்கள் அனைவரையும், மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர்.அவர்கள், தங்கள் வீடுகளிலேயே
பிரிட்டன், பயணி, மாநில அரசுகள், நடவடிக்கை

புதுடில்லி :பிரிட்டனில் இருந்து வந்த பயணியரை கண்டறியும் பணியில், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

ஐரோப்பிய நாடான, பிரிட்டனில் இருந்து, மத்திய பிரதேச தலைநகர் இந்துாருக்கு, 33 பேர், கடந்த, 15 நாட்களில் வந்துள்ளனர். இவர்கள் அனைவரையும், மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர்.அவர்கள், தங்கள் வீடுகளிலேயே தனிமைபடுத்தப்பட்டு, தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ‛தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் மட்டும், முகாம்களுக்கு மாற்றப்படுவர்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெளிநாடுகளில் இருந்து, கடந்த மாதம், 25 முதல், கடந்த, 8ம் தேதி வரை, உத்தர பிரதேசம் வந்த பயணியர் அனைவரும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று, அம்மாநில முதல்வர், யோகி ஆதித்யநாத், நேற்று உத்தரவிட்டார்.

மேலும், கடந்த, 9ம் தேதிக்கு பிறகு உ.பி., வந்தடைந்த அனைத்து வெளிநாட்டு பயணியருக்கும் கட்டாய பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.உருமாற்றம் அடைந்துள்ள, புதிய வகை வைரஸ் தொற்று கண்டறியப்படுபவர்கள், மற்ற கொரோனா நோயாளிகளிடம் இருந்தும் விலக்கப்பட்டு, தனிமையில் வைக்கப்படுவர் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‛கொரோனா உறுதி செய்யப்படும் அனைத்து பிரிட்டன் பயணிகளையும், முகாம்களில் தனிமை படுத்த, மஹாராஷ்டிரா அரசு, முடிவு செய்துள்ளது.லண்டனில் இருந்து, குஜராத்தின் ஆமதாபாதுக்கு, நேற்று முன் தினம் வந்த ஏர் - இந்தியா விமான பயணியரில், ஒரு பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர் உட்பட, நான்கு பேருக்கு கொரோனா உறுதியானது.

அடுத்தகட்டமாக, இவர்களின் தொற்று தன்மையை கண்டறியும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து மாவட்ட மற்றும் மாநகராட்சியின் சுகாதார அதிகாரிகள் அனைவரும், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை, கடுமையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-டிச-202019:31:08 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren those came from London should come forward or save the nation.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
24-டிச-202004:27:34 IST Report Abuse
J.V. Iyer சிம்பை விட்டு வாலை பிடிக்கும் அதிகாரிகள் இவ்வளவு பொறுப்பில்லாமல் உள்ளது வருந்த தக்கது.
Rate this:
alwar - alwar,இந்தியா
25-டிச-202021:51:43 IST Report Abuse
alwarஇவனுக எல்லாம் பிரிட்டன் காரன் வைரஸ் பத்தி விஷயத்தை வெளி விடுவதற்கு முன்பு வந்தவர்கள் , எல்லா வெளி நாடு பயலுகளும் மத்த நாட்டுக்கு வைரஸ் உள்ள ஆளுங்கள அனுப்பிச்சிட்டு கொஞ்ச நாள் கழிச்சு இந்த மாதிரி புது வைரஸ் ஒன்னு வர மாதிரி இருக்கு . எல்லாரும் ஜாக்கிரதை ரொம்ப லேட்டா சொல்றது தான் பெற்ற துன்பம் இவ்வையகம் அனைத்தும் பெற வேண்டும்...
Rate this:
Cancel
கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா
24-டிச-202002:10:29 IST Report Abuse
கும்புடுறேன் சாமி அப்படியே விஜயமல்லையா கொடுத்து விட்ட பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர வாய்ப்பும் இருக்கு அதனால இவர்களையெல்லாம் நல்லா கவனிக்கிற விதத்துல கவனிச்சு விசாரிங்க . தாய் நாட்டுலையே இவ்வளவு வேலைவாய்ப்பு கொட்டிக்கிடக்கும்போது இவங்க எதுக்கு பிரிட்டனுக்கு வேலைக்கு போறாங்க ? தாய்நாட்டு பற்று இல்லாதவங்க
Rate this:
ram, nigeria - Lagos,நைஜீரியா
24-டிச-202023:01:39 IST Report Abuse
ram, nigeria உளறக்கூடாது சாமியோவ்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X