பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் பாதுகாப்பு உறுதிப்படுத்த விழிப்புணர்வு

Added : டிச 23, 2020
Share
Advertisement
பந்தலுார் : பந்தலுார் அருகே, பென்னை, பாலாப்பள்ளி பழங்குடியின கிராமங்களில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.வி.ஏ.ஓ.,அசோக்குமார் வரவேற்றார். குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர் தவமணி பேசுகையில், ''பழங்குடியின பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல், தோட்ட வேலைகளுக்கு செல்வது, வனப்பகுதிகளில் விறகு உள்ளிட்ட பொருட்களை சேகரிக்க

பந்தலுார் : பந்தலுார் அருகே, பென்னை, பாலாப்பள்ளி பழங்குடியின கிராமங்களில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

வி.ஏ.ஓ.,அசோக்குமார் வரவேற்றார். குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர் தவமணி பேசுகையில், ''பழங்குடியின பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல், தோட்ட வேலைகளுக்கு செல்வது, வனப்பகுதிகளில் விறகு உள்ளிட்ட பொருட்களை சேகரிக்க செல்லும் போது, பல்வேறு தொல்லைகளுக்கு உள்ளாகின்றனர்.பெற்றோர் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், குடிப்பழக்கத்தை கைவிட வேண்டும். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும்,'' என்றார்.

தொடர்ந்து, டி.எஸ்.பி. அமீர் அகமது, 'பெண் குழந்தைகள் மீதான பாலியல் உள்ளிட்ட தாக்கு தல்களுக்கு கிடைக்கும் தண்டனை,' குறித்து விளக்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் லோகநாதன், தலைமையாசிரியர் சமுத்திர பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X