கூடலுார் : கூடலுாரில் நேந்திரன் வாழைக்கு குறைந்தபட்ச விலை கூட கிடைக்காததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கூடலுார், பந்தலுார் பகுதிகளில் உற்பத்தியாகும் நேந்திரன் வாழை, 'சிப்ஸ்' மற்றும் குழந்தைகள் சத்துணவு தயாரிப்பதற்காக, தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. முந்தைய ஆண்டுகளில் கிலோவுக்கு, 50 ரூபாய்க்கு மேல் விலை கிடைத்தது.நடப்பு ஆண்டு ஜன., முதல், 23 ரூபாய்க்கு கீழும், கேரளா ஓணம் பண்டிகையின் போது அதிக பட்சமாக கிலோவுக்கு, 40 ரூபாய் விலை கிடைத்தது. பின், மீண்டும் விலை வீழ்ச்சி அடைந்தது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கிலோவுக்கு, 13 ரூபாய் விலை தொடர்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், 'நேந்திரன் வாழை கிலோவுக்கு குறைந்தபட்சம், 25 ரூபாய் கிடைத்தால் மட்டுமே நஷ்டத்தை தவிர்க்க முடியும். எனவே, அரசு இதற்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.வியாபாரிகள் கூறுகையில்,'கர்நாடகா, கேரளாவில் நேந்திரன் உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக, விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE