பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., பிரமுகர் வாக்குவாதம்; வருவாய் துறை பணி புறக்கணிப்பு

Added : டிச 23, 2020
Share
Advertisement
கூடலுார் : கூடலுார் வட்ட வழங்கல் அலுவலரை, தி.மு.க., பிரமுகர் தகாத வார்த்தையால் திட்டியதால், ஊழியர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.கூடலுார் வட்ட வழங்கல் அலுவலராக (டி.எஸ்.ஓ.,) பணியாற்றி வருபவர் ராம்குமார். இவர் நேற்று, காலை, 11:15 மணிக்கு பழைய கோர்ட் சாலையில் உள்ள தன் அலுவலகம் முன்பு, தனது காரை 'பார்க்கிங்' செய்தார். அப்போது, தி.மு.க., மாணவரணி மாவட்ட அமைப்பாளர் ரெனால்ட்;

கூடலுார் : கூடலுார் வட்ட வழங்கல் அலுவலரை, தி.மு.க., பிரமுகர் தகாத வார்த்தையால் திட்டியதால், ஊழியர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

கூடலுார் வட்ட வழங்கல் அலுவலராக (டி.எஸ்.ஓ.,) பணியாற்றி வருபவர் ராம்குமார். இவர் நேற்று, காலை, 11:15 மணிக்கு பழைய கோர்ட் சாலையில் உள்ள தன் அலுவலகம் முன்பு, தனது காரை 'பார்க்கிங்' செய்தார். அப்போது, தி.மு.க., மாணவரணி மாவட்ட அமைப்பாளர் ரெனால்ட்; டி.எஸ்.ஓ., மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டு, ரெனால்ட் தகாத வார்த்தையால் அலுவலரை திட்டியுள்ளார். தகவலறிந்த தாசில்தார், ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் பணிபுரியும் வருவாய் துறை ஊழியர்கள் அலுவலக பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, கூடலுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, தி.மு.க., பிரமுகர் மீது புகார் அளித்தனர். போலீசார் அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். தகவல் அறிந்து வந்த கட்சி நிர்வாகிகள், வருவாய் துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நடந்த சம்பவத்திற்காக, ரெனால்ட், வருத்தம் தெரிவித்ததால், சுமுக தீர்வு ஏற்பட்டது. இதனை ஏற்று வருவாய் துறையினர் பணிக்கு திரும்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X