ஆனைமலை : பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில் தயாராகும் தென்னந்தடுக்குகள், கோடை கால வெயிலை சமாளிக்க வீட்டின் மேற்கூரையில் அமைக்க அனுப்பப்படுகிறது.
அதேபோல், கேரள பகுதிகளுக்கு செங்கல்சூளைகளுக்கும், தமிழகத்தின் பல பகுதிகளில் கோழிப்பண்ணைகள், வெங்காயம் சாகுபடிக்காகவும் அனுப்பப்படுகிறது. பிப்., முதல் ஆக., வரையிலான கோடையில் தென்னை மரங்களில் இருந்து அதிக ஓலைகள் விழுவதால், தடுக்கு சீசனாக உள்ளது.நவ., முதல் ஜன., வரையிலான மழைக்காலத்தில், ஓலைகள் வரத்து குறைந்து மிகக்குறைந்த அளவே கிடைக்கும். இந்நிலையில், பருவமழையால் பல பகுதிகளில் தடுக்கு தேவை குறைந்து, பொள்ளாச்சி, ஆனைமலையில் தென்னந்தடுக்கு வர்த்தகம் பாதித்துள்ளது.
தென்னந்தடுக்கு விற்பனையாளர் ஜானகி கூறியதாவது:மழையால் வெப்பம் மிகுந்த மாவட்டங்களில் தென்னந்தடுக்கு தேவை மிகவும் குறைந்துள்ளது. இப்பகுதிகளுக்கு தடுக்கு அனுப்பி ஒன்றரை மாதங்களாகிறது. தற்போது, கேரள பகுதிகளுக்கு செங்கல் சூளைகளுக்கும், சத்தியமங்கலம் பகுதிகளில் கோழி பண்ணைகளுக்கு மட்டுமே விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. உற்பத்தி குறைந்து, தேவையும் குறைந்துள்ளதால், பலரும் வேலை இழந்துள்ளனர்.இந்நிலையில், விலையில் பெரும் மாற்றம் ஏற்படவில்லை. ஜன., இறுதி முதல் மீண்டும் தடுக்கு தேவை அதிகரித்து, விற்பனைஅதிகரிக்கும்.இவ்வாறு, தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE