பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சி தேர்நிலையம் மார்க்கெட் முகப்பு பகுதியில் இருந்த கடைகள், ரோடு விரிவாக்கத்துக்காக இடிக்கப்பட்டன.
பொள்ளாச்சியில், அனைத்து ரோடுகளும் குறுகலாக இருப்பதால், நெரிசல் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து, வாகன ஓட்டுனர்கள் சிரமப்பட்டனர். இந்த திட்டத்துக்கு, 33.57 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது.தற்போது, நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிக்கு, 34.51 கோடி ரூபாய் நிதி, தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்காக பூமி பூஜை போடப்பட்டு, பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் மழைநீர் வடிகால் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தேர்நிலையம் அருகே உள்ள காய்கறி மார்க்கெட் முகப்பு பகுதியில், நகராட்சி கட்டடத்தில், இறைச்சி, எண்ணெய் உள்ளிட்ட கடைகள் செயல்பட்டன. இந்த கடைகள், ரோடு விரிவாக்கத்துக்காக நேற்று இடிக்கப்பட்டன.தற்போது, கான்கிரீட் கம்பிகள் தனியாக பிரித்து எடுக்கப்பட்டு, கட்டட கழிவுகள் அகற்றும் பணி நடக்கிறது. மேலும், அரசு மருத்துவமனை அருகே மின்கம்பங்கள் இடமாற்றும் பணியும் நடக்கிறது. தொடர்ந்து, பல்லடம் ரோட்டிலும் மின்கம்பங்கள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE