சென்னை:'அனைத்து மாவட்டங்களிலும், வரும், 28ம் தேதி, காங்கிரஸ் கொடி ஊர்வலம் நடத்த வேண்டும்' என, மாவட்டத் தலைவர்களுக்கு, தமிழக காங்., தலைவர் அழகிரி உத்தரவிட்டுள்ளார்.
அவரது அறிக்கை:காங்கிரசின், 136 வது ஆண்டு நிறுவன நாள் விழா, நாடு முழுதும், 28ம் தேதி சிறப்பாக கொண்டாப்பட உள்ளது. மாவட்ட வாரியாக, காந்தி சிலை அருகில், கட்சி கொடி ஏற்ற வேண்டும். கொடிகளை, 136 பேர் கைகளில் ஏந்தி, தலையில் காந்தி குல்லா அணிந்து, ஊர்வலமாக சென்று, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்த வேண்டும்.புதிய வேளாண் சட்டங்கள், பெட்ரோல், டீசல் காஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிராகவும், அ.தி.மு.க., அரசை அகற்றி நல்லாட்சி அமைத்திடவும், காங்கிரசார் உரத்த குரலில் உறுதி மொழி ஏற்க வேண்டும்.
அனைத்து மாவட்டங் களிலும், கொடி ஊர்வலம் நடத்த வேண்டும். சத்தியமூர்த்தி பவனில், 150 அடி உயர கம்பத்தில் காங்கிரஸ் கொடியை ஏற்றி, சிறப்புரை நிகழ்த்த இருக்கிறேன்.இவ்வாறு, அழகிரி கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE