சென்னை:பண்டிகைகள் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளில், அன்பை பறிமாறிக் கொள்வதற்கு, 'பசுமை பரிசு பெட்டகம்' என்ற புதிய திட்டத்தை, தோட்டக்கலைத் துறை துவக்கிஉள்ளது.
திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்கள், பரிசுகளை வழங்குவதை வழக்க மாக வைத்துள்ளனர். பண்டிகை மற்றும் விழாக்காலங்களில், அன்பை பரிமாறிக் கொள்வதற்கு, பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்குவது வழக்கம். இதை கருத்தில் வைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், பசுமை பரிசு பெட்டகம் என்ற, புதிய திட்டத்தை, தோட்டக்கலை துறை துவக்கி உள்ளது.
இந்த திட்டத்தின்படி, தொட்டியுடன் கூடிய பூச்செடி அல்லது அலங்கார செடி அல்லது துளசி உள்ளிட்ட மூலிகை செடி, 'டார்க் சாக்லேட், மில்க் சாக்லேட்' மற்றும் காய்கறி விதை பாக்கெட் மற்றும் காகித பை ஆகியவை, 100 ரூபாய்க்கு வழங்கப்பட உள்ளன.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, சென்னை, அடையாறு, கஸ்துாரிபாய் நகர் நல சங்க அலுவலகம், அண்ணாநகர் தோட்டக்கலை மூலிகை பண்ணை. மாதவரம் தோட்டக்கலை பண்ணை மற்றும் செயல் விளக்க பூங்கா, தேனாம்பேட்டை செம்மொழி பூங்கா ஆகியவற்றில், இந்த பசுமை பரிசு பெட்டகம் விற்பனை துவங்கியுள்ளது. காலை, 10:௦௦ மணி முதல் மாலை, 5:௦௦ மணி வரை விற்பனை நடக்கஉள்ளது. மொத்தமாக பசுமை பரிசு பெட்டகத்தை வாங்குபவர்களுக்கு சலுகைகள் வழங்க, தோட்டக்கலை துறை இயக்குனர் சுப்பையன் உத்தரவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE