தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
பிரிட்டன் நாட்டில் இருந்து, தமிழகத்திற்கு, நவ., 25ம் தேதியில் இருந்து வந்தவர்கள் விபரங்களை, 'இ- -- பாஸ்' நடைமுறையை பின்பற்றி, அனைத்து விபரங்களையும் சேகரித்து உள்ளோம். அதன்படி, 2,805 நபர்கள் விபரங்களை, தமிழக டி.ஜி.பி.,க்கும், மாவட்ட கலெக்டர்களுக்கும் கொடுத்துள்ளோம்.
அவர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் அனைவருக்கும், ஆர்.டி.பி.சி.ஆர்., கருவி வாயிலாக பரிசோதனை செய்யப்படும். இரண்டு நாட்களில் பிரிட்டனில் இருந்து, 37 பேர், தமிழகம் வந்துள்ளனர். அவர்களில், 33 பேரின் பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன. ஒருவர் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுகிறார். அதேபோல், வெளிநாடுகளில் இருந்து வந்த அனைவரின் விபரங்களையும், இ- - பாஸ் நடைமுறை வாயிலாக சேகரித்து உள்ளோம். இவர்களை, அந்தந்த சுகாதார ஆய்வாளர், காவல் துறை அதிகாரி, உள்ளாட்சி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இனி வருபவர்களும், இதே நடைமுறையை பின் பற்றி கண்காணிக்கப்படுவர்.வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என, அனைவரின் விபரங்களையும் சேகரித்து கண்காணிக்கிறோம். பொது மக்கள் அச்சம் அடைய வேண்டாம்.முகக் கவசம், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். ஊரடங்கில் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து, மாவட்ட கலெக்டர்கள், மருத்துவ நிபுணர்கள், அமைச்சர்கள் ஆகியோருடன் ஆலோசித்து, சூழலுக்கு ஏற்ப, முதல்வர் முடிவெடுப்பார். இவ்வாறு, ராதாகிருஷ்ணன் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE