பொது செய்தி

தமிழ்நாடு

வேலை உறுதியளிப்பு திட்டத்தில் மாற்றம் தேவை! பாசன காலத்தில் தொழிலாளர்கள் பற்றாக்குறை

Added : டிச 23, 2020
Share
Advertisement
உடுமலை : பாசன காலங்களில், தொழிலாளர்கள் பங்களிப்பு இல்லாமல், திட்டம் மற்றும் சாகுபடி பணிகள் பாதிப்பதை தவிர்க்க, வேலை உறுதியளிப்பு திட்டத்தில், மாற்றம் கொண்டு வர வேண்டும் என, விவசாயிகள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினர் எதிர்பார்த்துள்ளனர்.பி.ஏ.பி., மற்றும் அமராவதி பாசன திட்டங்களின் கீழ், தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், கடந்த, சில

உடுமலை : பாசன காலங்களில், தொழிலாளர்கள் பங்களிப்பு இல்லாமல், திட்டம் மற்றும் சாகுபடி பணிகள் பாதிப்பதை தவிர்க்க, வேலை உறுதியளிப்பு திட்டத்தில், மாற்றம் கொண்டு வர வேண்டும் என, விவசாயிகள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினர் எதிர்பார்த்துள்ளனர்.

பி.ஏ.பி., மற்றும் அமராவதி பாசன திட்டங்களின் கீழ், தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், கடந்த, சில மாதங்களாக, சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளது.இந்நிலையில், மத்திய, மாநில அரசுகளின், வேலை உறுதியளிப்பு திட்ட பணிகளுக்காக வரவும், தொழிலாளர்கள் வற்புறுத்தப்படுகின்றனர்.

சாகுபடி பணிக்கு தேவைப்படும் தொழிலாளர்கள், வேலை உறுதியளிப்பு திட்டத்துக்கு செல்வதால், பணிகள் பாதிக்கப்படுவதாக, விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.இரு தரப்பினரும் பாதிப்பதை தவிர்க்க, நடவு, களையெடுத்தல், மருந்து தெளித்தல், உரமிடுதல் மற்றும் தண்ணீர் பாய்ச்சுதல் பணிக்காக, அதிக கூலி கொடுத்து தொழிலாளர்களை வரவழைக்கின்றனர்.

வேலை உறுதியளிப்பு திட்டத்தை விட அதிக கூலி கிடைப்பதால், தொழிலாளர்களும், சாகுபடி காலங்களில் திட்டப்பணிக்கு செல்வதில்லை.அப்போது, திட்டப்பணிகள் முழுமையாக பாதித்து, நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு தொழிலாளர்கள் வருகை இல்லாமல், ஊரக வளர்ச்சித்துறையினர் திணறுகின்றனர்.தற்போது, வரப்பு சீரமைப்பு, தடுப்பணை அமைத்தல் போன்ற விவசாயம் சார்ந்த பணிகளில், உறுதியளிப்பு திட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதே போல், நடவு, களையெடுத்தல் உட்பட சாகுபடி பணிகளுக்கும், தொழிலாளர்களை பயன்படுத்துமாறு அரசு மாற்றம் கொண்டு வர வேண்டும்.

அரசு நிதியுடன், தொழிலாளர்களுக்கு, விவசாயிகளிடமிருந்து பங்களிப்பு தொகையை பெற்று, தொழிலாளர்களுக்கு வழங்கலாம். இதனால், சாகுபடி பணிகளும், பாதிக்காமல், தொழிலாளர்களுக்கும், நிரந்தர வேலை வாய்ப்பு கிடைக்கும். உணவு உற்பத்திக்கும், வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், அரசு பங்களிப்பும் கிடைப்பதால், விவசாயிகளும் பயன்பெறுவார்கள்.கேரளா மாநிலத்தில், ஏற்கனவே, இந்த முறை பின்பற்றப்பட்டு வருகிறது. எனவே, தமிழக அரசு, வேலை உறுதியளிப்பு திட்டத்தில், இந்த மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் சார்பில், கோரிக்கை மனு அனுப்பப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X