பொள்ளாச்சி : தி.மு.க., சார்பில், 'அ.தி.மு.க.,வை நிராகரிப்போம்' என்ற தலைப்பில், கிராம சபை கூட்டங்கள் நடந்தது. பொள்ளாச்சி, டி.கோட்டாம்பட்டியில், நடந்த நிகழ்ச்சிக்கு, வட்ட செயலாளர்கள் முத்து கண்ணன், முருகநாதன் தலைமை வகித்தனர். தொழிற்சங்க செயலாளர் கண்ணுசாமி வரவேற்றார்.
'அ.தி.மு.க.,வை நிராகரிப்போம்' என எழுதப்பட்ட பிளக்ஸில், மக்களிடம் கையொப்பம் பெறும் நிகழ்ச்சியை, நகர பொறுப்பாளர் டாக்டர் வரதராஜ் துவக்கி வைத்தார். தி.மு.க., ஆட்சியின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை மாநில விவசாய அணி துணைத்தலைவர் தமிழ்மணி வழங்கினார்.நல்லுாத்துக்குளியில் நடந்த கூட்டத்துக்கு, ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் மருதவேல் முன்னிலை வகித்தார். நெகமம் பேரூராட்சி, காளியப்பம்பாளையத்தில் நடந்த கூட்டத்துக்கு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சபரிகார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
வால்பாறைவால்பாறை டோபிகாலனி கன்னிமார் சுவாமி கோவில் வளாகத்தில் நடந்த கூட்டத்தில், நகர பொறுப்பாளர் பால்பாண்டி தலைமை வகித்து பேசும்போது, ''இருளில் மூழ்கிய தமிழகத்தை மீட்டெடுக்க, தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு பாடம் புகட்ட வேண்டும். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தி.மு.க., ஆட்சி வந்தவுடன் செய்து கொடுக்கப்படும். ''தேர்தலில், ஸ்டாலினை முதல்வராக்க அனைவரும் ஆதரவு தருவதோடு, கோவிலில் சுவாமி சன்னதியில் சத்தியம் செய்து உறுதி கூற வேண்டும்,'' என்றார். அவரது பேச்சால் சலசலப்பு ஏற்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE