கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'விருப்பத்துடன் மணம் முடித்து மதம் மாறினால் தலையிடக்கூடாது'

Updated : டிச 25, 2020 | Added : டிச 23, 2020 | கருத்துகள் (29)
Share
Advertisement
கோல்கட்டா :'பெண்கள், முழு விருப்பத்துடன், தனக்கு பிடித்தவரை திருமணம் செய்து, மதம் மாற விரும்பினால், அதில் யாரும் தலையிட முடியாது' என, கோல்கட்டா உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.இங்கு, 19 வயதான இளம்பெண் ஒருவர், வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம்
விருப்பம், திருமணம், மதம், கோல்கட்டா உயர் நீதிமன்றம்

கோல்கட்டா :'பெண்கள், முழு விருப்பத்துடன், தனக்கு பிடித்தவரை திருமணம் செய்து, மதம் மாற விரும்பினால், அதில் யாரும் தலையிட முடியாது' என, கோல்கட்டா உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.இங்கு, 19 வயதான இளம்பெண் ஒருவர், வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துள்ளார்.


வழக்குப்பதிவு


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பெண்ணின் தந்தை, வழக்குப்பதிவு செய்தார். தன் மகள், வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொள்ளப்பட்டதாக, அவர் புகார் அளித்தார்.இதையடுத்து, நாடியாவில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி, வாக்குமூலம் அளிக்க, அந்த பெண்ணுக்கு, கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி ஆஜரான அப்பெண், தன் முழு விருப்பத்துடனேயே திருமணம் நடந்ததாக கூறினார்.

இந்நிலையில், வாக்கு மூலம் அளித்த தன் மகளுடன், அவரது கணவரும் இருந்ததால், அவரால் எதையும் தைரியமாக சொல்ல இயலவில்லை என, அப்பெண்ணின் தந்தை புகார் அளித்தார். இது தொடர்பான மனுவை, உயர் நீதிமன்ற நீதிபதிகள் சஞ்ஜிவ் பானர்ஜி மற்றும்ஹரிஜித் பானர்ஜி அடங்கிய அமர்வு, நேற்று விசாரித்தது.அப்போது, பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:முழு விருப்பத்துடன், 18 வயதை கடந்தோர், தனக்கு பிடித்தவரை மணம் முடித்து, மதம் மாற விரும்பினால், அதில், யாரும் தலையிட முடியாது.


வாக்குமூலம்


பெண்ணின் வாக்கு மூலத்தைப் பெற்ற கூடுதல் மாவட்ட நீதிபதி, தெளிவான அறிக்கையை சமர்ப்பித்த பின்பும், அப்பெண்ணின் தந்தைக்கு சந்தேகம் உள்ளது.எனவே, கூடுதல் அரசு வழக்கறிஞர் சைபல் பாபுலி முன், அந்த பெண் மீண்டும் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும். அப்போது, அவரது கணவர் உட்பட யாரும் உடன் இருக்கக்கூடாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சரவணன் - Madurai,இந்தியா
24-டிச-202021:34:27 IST Report Abuse
சரவணன் ஒரு பெண்ணுக்கு நல்லது எது என்பது அவரின் பெற்றோர்களுக்கு தெரியுமா அல்லது கோர்ட்டுக்கு தெரியுமா? சில இடங்களில் அளவிற்கு மீறிய ஜனநாயகமும் ஆபத்து தான்.
Rate this:
Cancel
24-டிச-202019:50:11 IST Report Abuse
சம்பத் குமார் 1). இவ்வுலகில் பிறந்த மனிதர்களாகிய நாம் அனைவரும் சகோதரர்கள் ஆவர்.2). ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு வழியில் இறைவனை அடைய வழி சொல்கிறது.3). எல்லா மதங்களும் அழைத்து செல்லும் பாதை வெவ்வேறு ரூபங்களில் இருந்தாலும் சேரும் இடம் ஒன்றே ஆகும்.4).அவ்விதம் பார்க்கும்போது ஈஸ்வரன் எப்பொழுதும் தியானத்தில் இருப்பார். அப்படி எனில் அவர் யாரை நோக்கி தவம் செய்கிறார்.5).அதேபோல் எல்லா மதங்களில் தேவதூதர்கள் அவதரித்தனர்.6). அவர்கள் எல்லோரும் யாரோ ஒருவரை அவர்களுக்கு மீறிய பவர்ஃபுல் என்பதை அறிந்து பிராத்தனை செய்ய ஆரம்பித்தார்கள்.7). அப்படியெனில் யார் அந்த பெரிய கடவுள்.8). நிச்சயமாக ஒரு பெண் சக்தியாகதான் இருக்க வேண்டும். பெண்ணே இந்த பிரபஞ்சத்தை படைத்தாய்.9). பெண்களை போக பொருளாக கொள்ளும் கலியுகத்தில் நாம் உள்ளோம்.10). அநீதிகள் பெருகும் போதுதான் நீதி தோன்றும்.11). துஷ்பிரயோக சக்திகள் சக்தியான கார்த்தியாயினி அழித்து விடுவாள்.12). பெண்களை இழிவாக எதிர்மறை கருத்துக்கள் எழுதும் நண்பர்கள் மற்றும் அதற்கு துணை போன எல்லா மனிதர்களும் கார்த்தியாயினி அவர்களுக்கு சந்நிதிகள் இல்லாமல் போக அருள் புரிவாள்.நன்றி ஜயா.
Rate this:
Cancel
24-டிச-202015:09:27 IST Report Abuse
Ganesan Madurai .இந்துக்களை இந்துமதத்தை அழித்தொழிக்க வந்த சட்டத்திபடி பிறப்பித்த உத்தரவு இப்படித்தான் இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X