தமிழ்நாடு

மாற்றம் அவசியம்! மருத்துவமனைக்கு நடைபாதை மேம்பாலம்சாலை; விரிவாக்கத்துடன் இணைப்பதே தீர்வு

Added : டிச 23, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அரசு மருத்துவமனை அருகே, நோயாளிகள் ரோட்டை கடப்பதற்கு வசதியாக, சுரங்கபாதை அல்லது நடைபாதை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. தினமும், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வெளிநோயாளிகளாக வந்து சிகிச்சை பெறுகின்றனர். 300க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக உள்ளனர்.

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அரசு மருத்துவமனை அருகே, நோயாளிகள் ரோட்டை கடப்பதற்கு வசதியாக, சுரங்கபாதை அல்லது நடைபாதை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. தினமும், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வெளிநோயாளிகளாக வந்து சிகிச்சை பெறுகின்றனர். 300க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக உள்ளனர். மருத்துவமனையின் முன்பகுதி, நெடுஞ்சாலைத்துறையால் விரிவுபடுத்துப்படுகிறது.இதற்காக, அரசு மருத்துவமனை கட்டடம் மற்றும் முகப்பு பகுதிகள் இடிக்கப்பட்டு, விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், மருத்துவமனைக்கு வருபவர்களின் வசதிக்காக பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பொள்ளாச்சி - உடுமலை ரோடு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள் ரோட்டை கடந்து செல்ல வேண்டும். நான்கு வழிச்சாலையாக மாறிய பின், வாகனங்கள் வேகமாக செல்லக்கூடிய சூழலில், ரோட்டை கடந்து செல்வது சிரமமாக மாறி விடும்.இதனால், பொதுமக்கள் நடந்து செல்லவோ அல்லது வாகனத்தில் செல்லவோ சிரமப்படும் சூழல் நிலவும். இப்பிரச்னை குறித்து, நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.அரசு மருத்துவமனை அருகே, சுரங்கபாதை அமைக்கலாம் அல்லது மருத்துவமனை இருபக்கமும் நடைபாதை மேம்பாலம், அமைக்கலாம். இதனால், மருத்துவமனைக்கு செல்வோர் எளிதாக ரோட்டை கடக்க முடியும்.

தற்போது, நகரப்பகுதியில் ரோடுகள் விரிவாக்கப்பணி மேற்கொள்ளப்படுகிறது.நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் போது, 'சென்டர் மீடியன்' அமைக்கப்படும். அப்போது, நோயாளிகளும், பொதுமக்களும் ரோட்டை கடந்து செல்லும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.இதை தவிர்க்க, உடுமலை ரோட்டில் பி.ஏ.பி., அலுவலகம் அருகே 'லிப்ட்' வசதியுடன் நடைபாதை மேம்பாலம் அமைத்துள்ளதை போன்று, மருத்துவமனை அருகிலும் அமைக்க வேண்டும், என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்நிலையில், மருத்துவமனை முன், நோயாளிகள் வசதிக்காக ரோட்டை கடக்க மாற்று திட்டத்துக்கு ஆலோசிக்க வேண்டும்.சாலை அமைப்பதற்கு முன், இது குறித்தும் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது ரோடு விரிவாக்கப்பணியுடன் இது குறித்தும் ஆலோசிக்க வேண்டும். இது குறித்து, அரசுத்துறை அதிகாரிகள் ஆலோசித்தால் நிரந்தர தீர்வு கிடைக்கும்.

திட்டம் குறித்து ஆலோசனை!

அதிகாரிகள் கூறுகையில், 'நகரப்பகுதிக்குள் ரோடு விரிவாக்கத்துக்கு மட்டுமே திட்டமிடப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல், விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்கவே, சாலை விரிவுபடுத்தப்படுகிறது. 'அரசு மருத்துவமனை அருகே, நடைபாதை மேம்பாலம் அல்லது சுரங்க நடைபாதை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும். இந்நிலையில், அரசுக்கு கருத்துரு அனுப்பி, மருத்துவமனைக்கு நோயாளிகள் சிரமமின்றி வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X