பொது செய்தி

இந்தியா

வேளாண் சட்டங்களை ஆதரித்து பிரதமருக்கு விஞ்ஞானிகள் கடிதம்

Added : டிச 23, 2020
Share
Advertisement
புதுடில்லி:'மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் பெரும் பலனளிக்க கூடியவை' என்றும் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், பிரதமர் மோடிக்கு, விஞ்ஞானிகள் குழு ஒன்று கடிதம் எழுதியுள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள, இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் ரமேஷ் மற்றும், பல்வேறு கல்வி நிறுவனங்கள்,

புதுடில்லி:'மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் பெரும் பலனளிக்க கூடியவை' என்றும் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், பிரதமர் மோடிக்கு, விஞ்ஞானிகள் குழு ஒன்று கடிதம் எழுதியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள, இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் ரமேஷ் மற்றும், பல்வேறு கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களை சேர்ந்த விஞ்ஞானிகள் பலர், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்திய அரசு கொண்டு வந்துள்ள, மூன்று வேளாண் சட்டங்கள் பற்றி, விவசாயத்துறை நிபுணர்கள் பலருடன் நாங்கள் விரிவாக விவாதித்தோம். இந்த வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கு பெரிதும் பலனளிக்கும் என, அவர்கள் உறுதிபட தெரிவித்தனர்.

கடந்த, 1991ல், தொழிற்சாலை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இதில் விவசாயத்துறை சேர்க்கப்படவில்லை. விவசாயத்துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள, இதுவே சரியான தருணம். இதை, நாம் தவற விட்டுவிடக் கூடாது. இந்த வாய்ப்பை நாம் தவறவிட்டால், இந்தியாவில் விவசாயத்துக்கு எதிர்காலமே இல்லாமல் போய்விடும்.

இந்த வேளாண் சட்டங்கள், விவசாயிகள் நலனுக்கு எதிரானவை என, சில சக்திகள் பொய் பிரசாரம் செய்கின்றன. ஆனால், இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு பல நன்மைகளை கிடைக்க வழி வகை செய்யும் என்பதில், நாங்கள் உறுதியாக உள்ளோம். விவசாயிகள், தங்கள் பொருட் களுக்கு சரியான விலையைப் பெற, இந்த சட்டங்கள் வழி செய்துள்ளன. மேலும், தரகர்கள் பிடியிலிருந்து விவசாயிகளை விடுவித்து, அவர்கள், தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப, யாரிடமும் விற்பனை செய்யவும், இந்த சட்டங்கள் உதவுகின்றன.

விவசாயிகளுக்கு மட்டுமின்றி, நுகர்வோருக்கும், இந்த சட்டங்களால் நன்மைகள் ஏற்படும். விவசாயிகள், தங்கள் பொருட்களை, எங்கும், யாரிடமும் விற்க, இந்த சட்டங்கள் உரிமை வழங்கியுள்ளன. அதனால், சந்தையின் அதிகாரம், விவசாயிகள் கைகளில் தான் இருக்கும். அவர்கள், அரசு மண்டிகளில் பொருட்களை விற்க விரும்பினாலும், அதற்கும் வழிகாணப்பட்டு உள்ளது.

இந்த சட்டங்கள் முழுமையாக அமல்படுத்தப்பட்டதால், விவசாயத்துறையில் ஒளிவு மறைவற்ற வர்த்தகம் நடக்கும். இவை தொடர்பாக, விவசாயிகளின் அச்சம், கவலை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என, அரசு உறுதியளித்துள்ளது. தேவைப்பட்டால், சட்டங்களில் திருத்தம் செய்யவும், அரசு சம்மதித்துள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் ரத்து செய்யப்படமாட்டது, என்ற உறுதியும் அளிக்கப்பட்டுள்ளது.

அதனால், நடுத்தர, சிறு, குறு விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும் வகையில், கொண்டு வரப்பட்டுள்ள இந்த வேளாண் சட்டங்களை, நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். இந்த கடிதத்தை, நாங்கள் தனிப்பட்ட முறையில் தான் எழுகிறோம். எந்த நிறுவனம் சார்பிலும் எழுதவில்லை. இவ்வாறு, அவர்கள் கடிதத்தில் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X