புதுடில்லி: மேற்கு வங்க சட்டசபைக்கு அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தல், நேர்மையாகவும், அமைதியாகவும், பாதுகாப்புடனும் நடக்கும் என்பதை உறுதி செய்யுமாறு, மத்திய அரசு, மேற்கு வங்க அரசு மற்றும் தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபைக்கு, அடுத்த ஆண்டு ஏப்ரல் -- மே மாதங்களில் தேர்தல் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், புனீத் கவுர் தண்டா என்பவர், உச்ச நீதிமன்றத்தில், பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
![]()
|
அதன் விபரம்:மேற்கு வங்கத்தில், அரசியல் செயற்பாட்டாளர்களும், ஆளும் திரிணமுல் காங்., கட்சிக்கு எதிரானவர்களும், படுகொலை செய்யப்படுகின்றனர்.இது தொடர்பாக, மாநில அரசு, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இங்கு நடக்கும் அரசியல் வன்முறை மற்றும் படுகொலைகளை, சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட வேண்டும். மாநிலத்தில், அடிப்படை உரிமைகள், சட்டரீதியான உரிமைகள், மனித உரிமைகள் தொடர்ச்சியாக மீறப்படுகின்றன. இதில், மாநில அரசுக்கும், போலீசுக்கும் நேரடி பங்கு உள்ளது.பா.ஜ., தேசிய தலைவர், ஜே.பி.நட்டா தாக்கப்பட்டபோது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மூத்த போலீஸ் அதிகாரிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய உள்துறை செயலர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி.,க்கு நீதிமன்றம் உத்தரவிடவேண்டும்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள, மாநில சட்டசபை தேர்தல் பிரசாரம், ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கையின் போது, எதிர்க்கட்சி தொண்டர்கள் அச்சமின்றி பணியாற்றும் சூழலை போலீசார் ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்.மேலும், சட்டசபை தேர்தல், நேர்மையாகவும், அமைதியாகவும், பாதுகாப்புடனும் நடக்க, துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.இவை அனைத்தையும் உறுதி செய்யுமாறு, மத்திய அரசு, மாநில அரசு மற்றும் தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE