பொள்ளாச்சி : நெகமம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏற்பட்ட மின்கசிவால் பரபரப்பு ஏற்பட்டது.
நெகமம் - கோவில்பாளையம் ரோட்டில் உள்ள காளியப்பம்பாளையத்தில், நெகமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. சமீபத்தில், 20 படுக்கைகள், ஆபரேஷன் தியேட்டர் மற்றும் பிரசவ வார்டு வசதிகளுடன், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, 10:30 மணிக்கு, ஆபரேஷன் தியேட்டருக்கு அருகில் உள்ள அறையில், மின்கசிவு ஏற்பட்டு தீ பரவி, படுக்கையில் பற்றி எரிந்தது.அறைக்குள் இருந்து பெரும் புகை வெளியேறியதால், பரபரப்படைந்த டாக்டர்கள், பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கும், நெகமம் மின்வாரிய அலுவலகத்துக்கும் தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தனர். மின்வாரிய ஊழியர்கள், மின்கசிவை சீரமைத்தனர்.டாக்டர்கள் கூறுகையில், 'மின்கசிவு ஏற்பட்ட அறையில், ஒரு படுக்கை மட்டுமே உள்ளது. நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் தீ விபத்தின் போது உள்ளே இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE