பொது செய்தி

தமிழ்நாடு

பேச்சில் உடன்பாடு: லாரி 'ஸ்டிரைக்' வாபஸ்

Added : டிச 23, 2020
Share
Advertisement
சென்னை:அரசு நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, மாநில லாரி உரிமையாளர் சங்கம், வரும், 27ம் தேதி நடத்த இருந்த காலவரையற்ற, 'ஸ்டிரைக்' வாபஸ் பெறப்பட்டுள்ளது.வாகனங்களில் பொருத்த, வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள், ஒளிரும் பட்டைகள், புவி இடங்காட்டியான, ஜி.பி.எஸ்., கருவிகள் ஆகியவற்றை, குறிப்பிட்ட நிறுவனங்களிடம் மட்டுமே வாங்க அரசு அறிவுறுத்தியது.இந்த உத்தரவை திரும்ப
 பேச்சில் உடன்பாடு: லாரி 'ஸ்டிரைக்' வாபஸ்

சென்னை:அரசு நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, மாநில லாரி உரிமையாளர் சங்கம், வரும், 27ம் தேதி நடத்த இருந்த காலவரையற்ற, 'ஸ்டிரைக்' வாபஸ் பெறப்பட்டுள்ளது.

வாகனங்களில் பொருத்த, வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள், ஒளிரும் பட்டைகள், புவி இடங்காட்டியான, ஜி.பி.எஸ்., கருவிகள் ஆகியவற்றை, குறிப்பிட்ட நிறுவனங்களிடம் மட்டுமே வாங்க அரசு அறிவுறுத்தியது.இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம், 27ம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தது.

இதற்கு, தேசிய அளவிலான லாரி உரிமையாளர் சம்மேளனம் உள்ளிட்ட அமைப்புகள் ஆதரவு அளித்தன.இந்நிலையில், போக்குவரத்து துறை கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள், சென்னை, கே.கே.நகர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் மற்றும் 'சிம்டா' அமைப்பின் நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இது குறித்து, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலர் தன்ராஜ் கூறியதாவது: போக்குவரத்து துறை கமிஷனர் சங்கங்களுடன் பேச்சு நடத்தினார். அப்போது, 80 கி.மீ.,க்கு குறைவான வேகத்தில் செல்லும் வாகனங்களுக்கு, வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் தேவை யில்லை. ஏற்கனவே, பயன்பாட்டு நிலையில் உள்ள வேகக் கட்டுப்பாட்டு கருவிகளுக்குப் பதிலாக, புதிய கருவிகளை பொருத்த தேவையில்லை.

மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட எந்த நிறுவன கருவியையும், ஒளிரும் பட்டையையும் பயன்படுத்தலாம். அதை வாங்கியதற்கான ரசீதை பெற்று, வாகன புதுப்பிப்பு சான்றிதழ் பெறும் போது ஆர்.டி,ஓ., அலுவலகத்தில் சமர்ப்பித்தால் போதும்.போக்குவரத்து வாகனங்கள் குறித்த புதிய அறிவிப்புகளை வெளியிட, வாகன துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை ஏற்படுத்த, நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உட்பட, பல்வேறு வாக்குறுதிகளை கமிஷனர் அளித்தார்.

இதையடுத்து, 27ம் தேதி நடத்த இருந்த லாரிகள் வேலை நிறுத்தத்தை விலக்கிக் கொள்கிறோம்; லாரிகள் வழக்கம்போல் இயங்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X