பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய விவசாயிகள் தின பிரசாரம்; மானியம் பெற வாய்ப்பு

Added : டிச 23, 2020
Share
Advertisement
அன்னுார் : தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு, அன்னுார் வட்டார வேளாண்துறை சார்பில், நேற்று வாகன பிரசாரம் நடந்தது.பிரச்சாரத்தை துவக்கி வைத்த வேளாண் துணை இயக்குனர் (மாநில திட்டம்) பெருமாள்சாமி பேசுகையில், ''தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், மானியங்கள் வழங்கப்படுகின்றன. கைத்தெளிப்பான் வாங்க, சிறு, குறு விவசாயிகளுக்கு, 750 ரூபாயும், இதர விவசாயிகளுக்கு, 600 ரூபாயும்

அன்னுார் : தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு, அன்னுார் வட்டார வேளாண்துறை சார்பில், நேற்று வாகன பிரசாரம் நடந்தது.

பிரச்சாரத்தை துவக்கி வைத்த வேளாண் துணை இயக்குனர் (மாநில திட்டம்) பெருமாள்சாமி பேசுகையில், ''தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், மானியங்கள் வழங்கப்படுகின்றன. கைத்தெளிப்பான் வாங்க, சிறு, குறு விவசாயிகளுக்கு, 750 ரூபாயும், இதர விவசாயிகளுக்கு, 600 ரூபாயும் வழங்கப்படுகிறது. பயிர்பாதுகாப்பு மருந்து, களைக் கொல்லி மருந்து, நுண்ணுாட்டக் கலவை ஆகியவற்றுக்கு ஒரு எக்டேருக்கு, 500 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. மானியத்தில் சோள விதை வழங்கப்படுகிறது,'' என்றார்.

உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், "சிறுதானியங்களை மானாவாரியாக பயிரிடலாம். வளம் குறைவாக உள்ள மண்ணிலும் பயிரிடலாம். மதிப்புக்கூட்டி, தயாரித்து, விற்கலாம். விவசாயிகள் உழவன் செயலியை, தங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்து கொண்டால், வேளாண் அலுவலகத்திற்கு வராமலே, அனைத்து திட்டங்களுக்கும் பதிவு செய்து கொள்ளலாம். வேளாண் அலுவலகத்தில் என்னென்ன விதைகள், உரங்கள் இருப்பு உள்ளன. சந்தை நிலவரம், வானிலை நிலவரம், உதவி வேளாண் அலுவலர்களின் பயண விவரம் என அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்,'' என்றார்.

வேளாண் அலுவலர் திவ்யா, துணை வேளாண் அலுவலர் முருகன், ஆத்மா திட்ட தலைவர் பழனிச்சாமி மற்றும் முன்னோடி விவசாயிகள் பங்கேற்றனர். அ.மேட்டுப்பாளையம், பசூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் பிரசாரம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X