பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டுக்குள் பாம்பு வருகிறது! கிராமசபை கூட்டத்தில் புகார்

Added : டிச 23, 2020
Share
Advertisement
கோவில்பாளையம் : தி.மு.க., நடத்திய கிராமசபை கூட்டத்தில், மக்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.அத்திப்பாளையத்தில் தி.மு.க., சார்பில் நேற்று கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பொதுமக்கள் பேசுகையில், 'காமராஜ் நகர், அண்ணாநகர் பகுதியில், புதர்கள் மண்டி, குப்பைஅகற்றப்படாததால், பாம்புகள் வீட்டுக்குள் புகுந்து விடுகின்றன. பல தெருவிளக்குகள் எரிவதில்லை. கழிவுநீர் செல்ல

கோவில்பாளையம் : தி.மு.க., நடத்திய கிராமசபை கூட்டத்தில், மக்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.

அத்திப்பாளையத்தில் தி.மு.க., சார்பில் நேற்று கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பொதுமக்கள் பேசுகையில், 'காமராஜ் நகர், அண்ணாநகர் பகுதியில், புதர்கள் மண்டி, குப்பைஅகற்றப்படாததால், பாம்புகள் வீட்டுக்குள் புகுந்து விடுகின்றன. பல தெருவிளக்குகள் எரிவதில்லை. கழிவுநீர் செல்ல வடிகால் வசதி இல்லை' என்றனர்.முதியோர் சிலர், 'உதவித் தொகைக்காக விண்ணப்பித்து, பல மாதங்கள் ஆகியும் உத்தரவு கிடைக்கவில்லை' என்றனர். ஏரி மேடு பகுதியை சேர்ந்த 18 பேர், 'மின் இணைப்புக்காக விண்ணப்பித்து பல மாதங்கள் ஆகியும் மின் இணைப்பு கிடைக்கவில்லை' என்று புகார் தெரிவித்தனர்.

கூட்டத்தில், 16 பேர் எழுத்துப்பூர்வமாக மனுக்கள் அளித்தனர். 20 பேர் வாய்மொழியாக புகார் தெரிவித்தனர். தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மணி, சுப்பையன் முன்னிலை வகித்தனர். வெள்ளானைப்பட்டி ஊராட்சி தலைவர் கவிதா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X