அரங்கநாதர் கோவில் விழாவில் கட்டுப்பாடு;சொர்க்கவாசல் திறப்பு விழாவில் காலை 8 மணிக்கு பிறகே அனுமதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரங்கநாதர் கோவில் விழாவில் கட்டுப்பாடு;சொர்க்கவாசல் திறப்பு விழாவில் காலை 8 மணிக்கு பிறகே அனுமதி

Added : டிச 23, 2020
Share
மேட்டுப்பாளையம் : 'காரமடை அரங்கநாதர் கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவில், காலை, 8:00 மணியிலிருந்து பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்' என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.கோவை மாவட்டம், காரமடையில் மிகவும் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோவில் உள்ளது. இங்கு வைகுண்ட ஏகாதசி, சொர்க்கவாசல் திறப்பு விழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா பிரச்னையால், வைகுண்ட ஏகாதசி

மேட்டுப்பாளையம் : 'காரமடை அரங்கநாதர் கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவில், காலை, 8:00 மணியிலிருந்து பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்' என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை மாவட்டம், காரமடையில் மிகவும் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோவில் உள்ளது. இங்கு வைகுண்ட ஏகாதசி, சொர்க்கவாசல் திறப்பு விழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா பிரச்னையால், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழாவில், பக்தர்கள் பங்கேற்க கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.கோவில் நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கை:வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மார்கழி பகல்பத்து, ராப்பத்து உற்சவம், அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கடந்த, 15ம் தேதியில் இருந்து, ஜனவரி, 3ம் தேதி வரை நடக்கிறது.

சொர்க்கவாசல் திறப்பு, 25ம் தேதி காலை, 5:30 மணிக்கு நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையை முன்னிட்டு, விழா நாட்களில், சுவாமி புறப்பாடு திருக்கோவில், உள்பிரகாரத்தில் மட்டுமே நடைபெறும். வெளிப்புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.விழா நிகழ்ச்சிகளில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா நாளில், காலை, 8:00 மணியிலிருந்து இரவு, 8:00 மணி வரை மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு, பக்தர்கள் அரசு வழிகாட்டு நெறி முறைப்படி அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X