மேட்டுப்பாளையம் : ஊட்டி சாலையில், கல்லாறு பகுதியில் சாலையோரம், வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலை, மலைப் பகுதியில் அமைந்துள்ளது. யானைகள் ஊட்டி சாலை வழியாக இடம்பெயர்ந்து செல்கின்றன. சில தினங்களாக, கல்லாறு அருகே யானைகள், சாலையோரங்களில் நிற்கின்றன. வாகனங்கள் ஏதும் வராத நிலையில், யானைகள் சாலையை கடந்து செல்கின்றன. அப்போது அவ்வழியாக வருபவர்கள், வாகனங்களை நிறுத்தி, கீழே இறங்கி செல்பி எடுக்கின்றனர்.இதனால் ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் பழனி ராஜா உத்தரவின் பேரில், வனவர் சுரேஷ், வனக்காப்பாளர், காவலர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் கல்லாற்றில், யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.'சாலையின் ஓரங்களில் மாலை நேரத்தில், வாகனங்களை நிறுத்த வேண்டாம்' என, வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் அறிவுரை கூறி அனுப்பி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE