பொது செய்தி

தமிழ்நாடு

263 பயனாளிகளுக்கு நாட்டுக்கோழிகள்

Added : டிச 23, 2020
Share
Advertisement
பெ.நா.பாளையம் : துடியலுார் அருகே தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில், 263 பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் விழா நடந்தது.துடியலுார் அருகே உள்ள பழனி கவுண்டன்புதுார், மடத்துார் மற்றும் ஆனைகட்டியில் உள்ள ஜம்புகண்டி ஆகிய கிராமங்களில் இந்நிகழ்ச்சி நடந்தது. கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் இளங்கோ தலைமை வகித்தார்.சிறப்பு

பெ.நா.பாளையம் : துடியலுார் அருகே தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில், 263 பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் விழா நடந்தது.

துடியலுார் அருகே உள்ள பழனி கவுண்டன்புதுார், மடத்துார் மற்றும் ஆனைகட்டியில் உள்ள ஜம்புகண்டி ஆகிய கிராமங்களில் இந்நிகழ்ச்சி நடந்தது. கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் இளங்கோ தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி பங்கேற்று, பன்னிமடை, சோமையம்பாளையம், அசோகபுரம், குருடம்பாளையம், நஞ்சுண்டாபுரம், சின்னத்தடாகம், எண். 24 வீரபாண்டி ஆகிய ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த, 263 பயனாளிகளுக்கு தலா, 25 கோழிக்குஞ்சுகள், 150 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை வழங்கினார்.பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய தலைவர் நர்மதா துரைசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ரவி, ரங்கராஜ், ரத்தினம் மருதாசலம், கார்த்திகேஷ்வரி சுந்தரராஜன், ரமேஷ், பழனிசாமி, சவுந்தர வடிவு ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X