வளர்ப்பு மாடுகளால் வாகன ஓட்டிகள் திண்டாட்டம்

Added : டிச 23, 2020
Share
Advertisement
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில், சாலையில் சுற்றும் மாடுகளால், நகரில் தீராத போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியாமல் போலீசார் பரிதவிக்கின்றனர்.மேட்டுப்பாளையத்தில், நெல்லித்துறை சாலை, காந்தி மைதானம் ஆகிய இடங்களில், 75-க் கும் மேற்பட்ட கிழங்கு மண்டிகள் உள்ளன. இந்த மண்டிகளில் உருளைக்கிழங்கை தரம் பிரித்த பின்பு, அழுகிய மற்றும் காயம்

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில், சாலையில் சுற்றும் மாடுகளால், நகரில் தீராத போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியாமல் போலீசார் பரிதவிக்கின்றனர்.

மேட்டுப்பாளையத்தில், நெல்லித்துறை சாலை, காந்தி மைதானம் ஆகிய இடங்களில், 75-க் கும் மேற்பட்ட கிழங்கு மண்டிகள் உள்ளன. இந்த மண்டிகளில் உருளைக்கிழங்கை தரம் பிரித்த பின்பு, அழுகிய மற்றும் காயம் அடைந்த கிழங்குகளை தின்று பசியாறும் மாடுகள், எந்நேரமும் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. அவற்றின் உரிமையாளர்களும், வீட்டில் கட்டி வளர்க்காமல், சாலையில் விட்டு விடுகின்றனர். மண்டிகளில் கழிவு கிழங்குகளை தின்னும் மாடுகள், சாலையோரங்களில் புல் மேய்ந்தபடி அங்குமிங்கும் சுற்றி வருகின்றன. சாலையில் குறுக்கு, நெடுக்காக துள்ளிக் குதித்து ஓடுகின்றன.

வாகனங்களில் மோதி விபத்துக்கும் உள்ளாகின்றன. இதில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.கிழங்கு மண்டிகள் நிறைந்த நெல்லித்துறை, எஸ்.எம்.,நகர் சாலைகளில், மாடுகள் படுத்துக் கொள்வதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த பிரச்னைக்கு எப்படி தீர்வு காண்பது என்று தெரியாமல் போலீசார் தலையை பிய்த்துக் கொள்கின்றனர்.நகராட்சி நிர்வாகத்தினர் மாடுகளை பிடித்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X