பொது செய்தி

தமிழ்நாடு

சபரிமலை செல்ல ஆன்லைனில் பதிய முடியவில்லையே! ஐயப்ப பக்தர்கள் வருத்தம்

Added : டிச 24, 2020
Share
Advertisement
சூலுார் : சபரிமலைக்கு செல்ல ஆன்லைனில், பதிவு செய்ய முடியாத நிலை உள்ளதால், ஐயப்ப பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.கொரோனா வைரஸ் பரவலை அடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பள்ளி, கல்லுாரிகள், கோவில்கள் மூடப்பட்டன. ஜூன் மாதம் முதல் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. நாடு முழுவதும் கோவில்கள் நிபந்தனைகளுடன் திறக்கப்பட்டன.கேரள

சூலுார் : சபரிமலைக்கு செல்ல ஆன்லைனில், பதிவு செய்ய முடியாத நிலை உள்ளதால், ஐயப்ப பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பள்ளி, கல்லுாரிகள், கோவில்கள் மூடப்பட்டன. ஜூன் மாதம் முதல் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. நாடு முழுவதும் கோவில்கள் நிபந்தனைகளுடன் திறக்கப்பட்டன.கேரள மாநிலத்தில் ஐயப்பன் கோவிலும் திறக்கப்பட்டது. தரிசனத்துக்கு நிபந்தனைகளுடன் குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களே அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனால், பல்வேறு மாநிலங்களிலும் இருந்து சபரிமலைக்கு செல்லமுடியாமல் பக்தர்கள் தவித்துவருகின்றனர். ஆன் லைனில் சரிவர பதிவு கூட செய்யமுடியாமல் வேதனையடைந்துள்ளனர்.

சூலுாரை சேர்ந்த ஐயப்ப பக்தர் ஜனார்த்தனன் கூறியதாவது:சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டதில் இருந்து தினமும், ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். சனி மற்றும் ஞாயிறுகளில், 2 ஆயிரம் பேருக்கு அனுமதி கிடைத்து வந்தது. ஆன்லைனில் முதலில் பதிவு செய்ய வேண்டும். எங்கு இருந்து செல்கிறோமோ அந்த பகுதியில் 'கொரோனா டெஸ்ட்' எடுத்து ரிப்போர்ட் பெற வேண்டும்.

கேரளாவுக்குள் நுழைந்தவுடன் அங்கும் ஒரு டெஸ்ட் எடுக்க வேண்டும். அது 'நெகடிவ்' ஆக இருந்தால் மட்டுமே தரிசனத்துக்கு செல்ல அனுமதித்து வந்தனர்.தற்போது மகர விளக்கு பூஜை நடப்பதால், கூடுதலாக பக்தர்களை அனுமதிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆன் லைனில் பதிவு செய்ய முயற்சித்தால் அந்த இணையதளம் திறப்பதே இல்லை.

திறந்தாலும் ஒரு சில நாட்களுக்கு மட்டுமே பதிவு செய்ய முடிகிறது. இதனால், பக்தர்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். கேரள அரசும், தேவஸம்போர்டும் உடனடியாக இப்பிரச்னைக்கு தீர்வு கண்டால் மட்டுமே, வெளி மாநில பக்தர்கள் சுவாமியை தரிசிக்க முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X