வடவள்ளி : வடவள்ளி, மருதமலை மேல்நிலைப்பள்ளி பஸ் ஸ்டாப்பில், நிழற்குடை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவையில், அதிவேகமாக வளர்ந்து வரும் பகுதிகளில், வடவள்ளி பகுதி முக்கிய இடம் பிடிக்கிறது. மருதமலை சாலையில், வேளாண் பல்கலை, பாரதியார் பல்கலை, அண்ணா பல்கலை, சட்டக்கல்லூரி, சார்பதிவாளர் அலுவலகம், முக்கிய பள்ளிகள் உள்ளன. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர்.மருதமலை தேவஸ்தான மேல்நிலைப்பள்ளி, வடவள்ளியில் செயல்பட்டு வருகிறது.
இப்பகுதியில் உள்ள மக்கள், வடவள்ளியில் இருந்து ஆர்.எஸ்.புரம் சாலை செல்வதற்கு, மருதமலை தேவஸ்தான பள்ளி வளாகத்தின் முன் பஸ் ஸ்டாப்பும், அதற்கு எதிர் திசையில் மற்றொரு பஸ் ஸ்டாப்பும் உள்ளது.ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வரும், இந்த பஸ் ஸ்டாப்பில், பொதுமக்கள், மழை, வெயில் போன்ற நேரங்களில் ஒதுங்கி நிற்ககூட, நிழற்குடை இல்லை.இப்பகுதியில் நினைத்த இடத்தில், பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றிச் செல்லும் போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மருதமலை தேவஸ்தான பள்ளி வளாகத்தின் முன் உள்ள சாலை அகலமாக உள்ளதால், பஸ் ஸ்டாப் பகுதியில் 'பஸ் லேன்' அமைத்து, பஸ்களை நிறுத்தினால், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்கலாம்.இரண்டு பஸ் ஸ்டாப்களிலும், பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE