பேரூர் : மினி லாரி வாயிலாக விற்கப்படும், இமாச்சல பிரதேச வெள்ளைப் பூண்டை, மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.
தேனி மாவட்டம் வடுகப்பட்டி பூண்டு மார்க்கெட்டுக்கு, தமிழகம் மட்டுமின்றி இமாச்சல பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் விளையும் வெள்ளைப்பூண்டு விற்பனைக்காக கொண்டு வரப்படும்.தேனி மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த வியாபாரிகள், மினி லாரிகளில் வெள்ளைப் பூண்டுகளை எடுத்து வந்து, கோவை முழுதும் விற்று வருகின்றனர். கிலோ ரூ.100க்கு விற்பதால், மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.
வியாபாரி ஜெகன் கூறுகையில், ''பெரியகுளம் வடுகப்பட்டி பூண்டு மார்க்கெட்டுக்கு வரத்து அதிகம். அங்கிருந்து கிலோ, ரூ.80க்கு எடுத்து வந்து, கோவை முழுதும் ஊர் ஊராக சென்று விற்பனை செய்கிறோம். விலை குறைவாக இருப்பதால், மக்கள் விரும்பி வாங்குகின்றனர்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE