கோவை : செல்வபுரம், சேத்துமாவாய்க்கால் பகுதியிலுள்ள ஒரு மயான வளாகத்தில், சந்தன மரங்கள் உள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள், அங்கு இருந்த மூன்று சந்தன மரங்களை வெட்டி கடத்தியுள்ளனர்.
சுமார் 15- 20 அடி உயரமுள்ள தடிமனான மரத்தின் அடிப்பகுதியை, வெட்டி கடத்தி விட்டு கிளைகளை அங்கேயே விட்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக, செல்வபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.கடந்த மாதம், ரெட்பீல்டு நீதிபதிகள் குடியிருப்பு வளாகத்தில், சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்டது. அந்த வழக்கில், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE