நாகப்பட்டினம்:நாகை அருகே, சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தில், மீன் இறங்கு தளம் அமைக்கப்படும் என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அங்கு மீன்வளத்துறை மூலம் மீன்பிடி வலை பின்னும் கூடம் அமைக்கப்பட்டது.ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், இறங்கு தளம் அமைக்கும் பணிகள் துவக்கப்படவில்லை. ஆத்திரம் அடைந்த மீனவர்கள், அனைத்து தேர்தல்களையும் புறக்கணிக்கப் போவதாக அறிவித்து, 21ம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை துவக்கினர்.
நேற்று முன்தினம், அதிகாரிகள் நடத்திய பேச்சு தோல்வி அடைந்தது. தொடர்ந்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், இரவு தீப்பந்தம் ஏந்தி, தமிழக அரசை கண்டித்து, கோஷங்கள் எழுப்பினர். மூன்றாவது நாளான நேற்று, மீனவர்கள் கையில் கறுப்பு கொடி ஏந்தி, கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE