கோவை : கோவையில், கொரோனா தடுப்பூசிகளை பதப்படுத்துவதற்காக, மூன்று குளிர்பதன அறைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கொரோனாவை விரட்டும் தடுப்பூசிகள், வரும் நாளை எதிர்பார்த்து, கோவை மக்கள் காத்திருக்கின்றனர். விரைவில் வரவுள்ள தடுப்பூசியை பாதுகாக்க, விரிவான ஏற்பாடுகளை மாவட்ட சுகாதார துறை செய்து வருகிறது.சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறியதாவது: முதலில் சென்னையில் இருந்து கோவைக்கு, தடுப்பூசிகள் கொண்டு வரப்படும். திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு இங்கிருந்து அனுப்பப்படும்.
இந்த தடுப்பூசி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும், அனைத்து சுகாதார பணியாளர்களுக்கும் செலுத்தப்படும். மருந்தை பாதுகாக்க ஏற்கனவே, இரண்டு குளிர்பதன அறைகள் உள்ளன. கூடுதலாக மற்றொரு அறையும் தயார் செய்யப்பட்டுள்ளது.சுகாதார பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டதும், முன்கள பணியாளர்கள், துாய்மை பணியாளர்கள், வருவாய் துறையினர், போலீஸ், அங்கன்வாடி பணியாளர்களுக்கும், 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும், இணை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE