சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவி வீட்டில் 'சம்மன்' ஒட்டி சென்ற போலீசார்

Added : டிச 24, 2020
Share
Advertisement
பரமக்குடி:'நீட்' தேர்வு மதிப்பெண் சான்றிதழில் முறைகேடு செய்ததாக, பரமக்குடி டாக்டர் பாலச்சந்திரன், மகள் தீக் ஷா ஆகியோரை, மூன்றாவது முறையாக விசாரணைக்கு அழைத்த சென்னை போலீசார், அவர்கள் வீட்டில் சம்மன் ஒட்டினர்.ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நேரு நகர் பல் டாக்டர் பாலச்சந்திரன். மகள் தீக் ஷா 18. நீட் தேர்வு மதிப்பெண்ணில் குளறுபடி செய்ததாக, மருத்துவ மாணவர் சேர்க்கை

பரமக்குடி:'நீட்' தேர்வு மதிப்பெண் சான்றிதழில் முறைகேடு செய்ததாக, பரமக்குடி டாக்டர் பாலச்சந்திரன், மகள் தீக் ஷா ஆகியோரை, மூன்றாவது முறையாக விசாரணைக்கு அழைத்த சென்னை போலீசார், அவர்கள் வீட்டில் சம்மன் ஒட்டினர்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நேரு நகர் பல் டாக்டர் பாலச்சந்திரன். மகள் தீக் ஷா 18. நீட் தேர்வு மதிப்பெண்ணில் குளறுபடி செய்ததாக, மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜன் புகாரில், சென்னை பெரியமேடு போலீசார், ஆறு பிரிவுகளில், வழக்குப்பதிவு செய்தனர்.விசாரணைக்கு ஆஜராகும்படி, இருவருக்கும் இரண்டு முறை, போலீசார் சம்மன் அனுப்பினர்.

பரமக்குடியில் உள்ள பாலச்சந்திரன் தாயாரிடம் சம்மன் வழங்கப்பட்டது. இருமுறையும் அவர்கள் ஆஜராகவில்லை.இதனால், நேற்று மூன்றாவது சம்மன் கொடுக்க வந்த போலீசார், வீட்டில் யாரும் இல்லாததால், வீட்டு கதவில் ஒட்டி சென்றனர். அதில், இன்று காலை, 10:00 மணிக்கு ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தனிப்படை போலீசார், தலைமறைவாக உள்ள பாலச்சந்திரன், தீக் ஷாவை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X