விழுப்புரம்:''முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது, தி.மு.க., கூறியுள்ள புகார்களுக்கு அடிப்படை ஆதாரம் இருந்தால், நேரடியாக வழக்கு தொடுக்கலாம்; சந்திக்க தயாராக உள்ளோம்,'' என, சட்டத்துறை அமைச்சர் சண்முகம் கூறினார்.
விழுப்புரத்தில் அவர் அளித்த பேட்டி: அ.தி.மு.க., முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீதான புகார் பட்டியலை, கவர்னரிடம் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அளித்துள்ளார். இவை புதிய புகார்கள் கிடையாது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, பொய்யான புகார்களை, யாராவது எழுதி தருவதை கூறி வருகிறார் ஸ்டாலின்.
'பாரத் நெட்' திட்டத்தில், 1,950 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக கூறி உள்ளார். இன்னும் டெண்டர் விடவில்லை, பணி நடைபெறவில்லை. நடக்காத டெண்டரில் ஊழல் எனக் கூறுவது, மக்களை ஏமாற்றும் வேலை. கடந்த, 2007ம் ஆண்டு துணை முதல்வராக ஸ்டாலின் இருந்தபோது, அவர் மகன் உதயநிதி, அனுமதி பெறாமல், வெளிநாட்டு காரை இறக்குமதி செய்து, வரி ஏய்ப்பு செய்தார். அன்று, மன்மோகன்சிங் அரசு அந்த காரை பறிமுதல் செய்ததா, இல்லையா?
ஸ்டாலின் மருமகன் சபரீசன், காலாவதியான மருந்துகளை கோடி கணக்கில் விற்றவர். தி.மு.க., - எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீது சிறப்பு நீதிமன்றத்தில், 368 வழக்குகள் உள்ளன. ஊழல் பெயரை இந்தியாவில் அறிமுகம் செய்ததே கருணாநிதி தான். தி.மு.க., கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு, அடிப்படை ஆதாரமிருந்தால், நேரடியாக வழக்கு தொடுங்கள். நாங்கள் சந்திக்க தயாராக உள்ளோம்.
தி.மு.க.,விற்கு மக்கள் மீதும், ஜனநாயகம் மீதும் நம்பிக்கை இல்லை. தேர்தலை மனதில் கொண்டு, பொய் குற்றச்சாட்டுகளை, புதிதாக கொடுத்துள்ளனர்.ஸ்டாலின் வாழ்க்கையே பினாமி தான். பா.ஜ., ஆட்சிக்கு யாரும் அடிபணியவில்லை. விவசாயியை பற்றி பேச, தி.மு.க.,விற்கு அருகதை கிடையாது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE