பாலசோர் :விண்ணில் குறிப்பிட்ட துார இலக்கை தாக்கி அழிக்கும் நாட்டின் புதிய ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரேல் தொழில்நுட்ப உதவியுடன் தரையில் இருந்து விண்ணில் குறிப்பிட்ட இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை உருவாக்கி உள்ளது.இந்த ஏவுகணை ஒடிசா மாநில கடற் கரையில் நேற்று வெற்றிகரமாக பரி சோதிக்கப்பட்டது. முன்னதாக பறக்கவிடப்பட்ட ஆளில்லா விமானத்தை அடுத்ததாக ஏவப்பட்ட புதிய ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது.
இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறும்போது 'புதிய ஏவுகணை பரிசோதனை முழுமையாக வெற்றி அடைந்துள்ளது. ராணுவத்தில் சேர்க்கப்பட்ட பின் இந்த ஏவுகணையின் செயல்திறன் கணிசமாக மேம்படுத்தப்படும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE