சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வருவாய்த்துறை அலுவலர்கள் ராமநாதபுரத்தில் தர்ணா

Added : டிச 24, 2020
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தர்ணா மற்றும் காத்திருப்பு போராட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் பழனிக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தமீம் ராஜா முன்னிலை வகித்தார். துணைத் தலைவர்கள் ரவிராஜ், சேதுராமன், வரதராஜன், பொருளாளர் சதீஷ்குமார், இணை செயலாளர்கள் காசிநாததுரை, பரமசிவன்,

ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தர்ணா மற்றும் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

சங்க மாவட்ட தலைவர் பழனிக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தமீம் ராஜா முன்னிலை வகித்தார். துணைத் தலைவர்கள் ரவிராஜ், சேதுராமன், வரதராஜன், பொருளாளர் சதீஷ்குமார், இணை செயலாளர்கள் காசிநாததுரை, பரமசிவன், சுந்தர்ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். பழைய பென்ஷன் திட்டம் வேண்டும். ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்த போராட்ட காலத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.கொரோனாவால் நிறுத்தப்பட்ட அகவிலைப் படி உயர்வு, விடுப்பு ஒப்படைப்பு உள்ளிட்ட பண பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X