ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட ஹிந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் ராமமூர்த்தி சைபர் கிரைம் போலீசாருக்கு ஆன்-லைன் புகார் அனுப்பி உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:தி.மு.க., சார்பில் நடந்த அரசியல் பொதுக்கூட்டத்தில் டிச.,18 ல் எஸ்றா சற்குணம் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், பிரதமர் மோடி குறித்து அவரதுமாண்பு, மரியாதையை குலைக்கும் வகையிலும், ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தும் விதத்திலும் பேசியுள்ளார்.மேலும் ஒரு பிரிவினரை துாண்டி கலவரத்தை ஏற்படுத்தி சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் பேசியுள்ளார். எனவே அவர் மீது வழக்கு பதிய வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE