பொது செய்தி

இந்தியா

உள்நாட்டு பாதுகாப்பு பணி ஐ.டி.பி.பி., எதிர்பார்ப்பு

Added : டிச 24, 2020
Share
Advertisement
புதுடில்லி:நாட்டின் எல்லை பாதுகாப்புப் பணியில் பி.எஸ்.எப்., ஐ.டி.பி.பி. மற்றும் எஸ்.எஸ்.பி. எனப்படும் சாஸ்ஹத்ர சீமா பல் ஆகியவை ஈடுபட்டுள்ளன. அத்துடன் உள்நாட்டு பாதுகாப்புப் பணியிலும் இந்த படையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.சீனா, பாக்., அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால் எல்லைப் படைகளுக்கு உள்நாட்டு பாதுகாப்பு பணிகளை அளிப்பதை குறைக்க மத்திய அரசு

புதுடில்லி:நாட்டின் எல்லை பாதுகாப்புப் பணியில் பி.எஸ்.எப்., ஐ.டி.பி.பி. மற்றும் எஸ்.எஸ்.பி. எனப்படும் சாஸ்ஹத்ர சீமா பல் ஆகியவை ஈடுபட்டுள்ளன. அத்துடன் உள்நாட்டு பாதுகாப்புப் பணியிலும் இந்த படையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

சீனா, பாக்., அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால் எல்லைப் படைகளுக்கு உள்நாட்டு பாதுகாப்பு பணிகளை அளிப்பதை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இந்நிலையில் உள்துறைக்கான பார்லிமென்ட் குழு கூட்டம் சமீபத்தில் நடந்தது. அப்போது 'உள்நாட்டு பாதுகாப்பு பணியும் தர வேண்டும்' என ஐ.டி.பி.பி. தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து அதன் உயரதிகாரிகள் கூறியுள்ளதாவது:மிகவும் கடுமையான பனி நிலவும் மலை பிரதேசத்தில் வீரர்கள் பணியாற்றுகின்றனர். பனி தொடர்பான நோய்களால் பாதிக்கப் படுகின்றனர். அதனால் சிறிது காலம் உள்நாட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவது அவர்களுக்கு மாற்றத்தை தரும். அப்போதுதான் சிறந்த முறையில் பணியாற்ற முடியும். உள்நாட்டு பாதுகாப்பு பணியிலும் எங்களை ஈடுபடுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X