சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சி மாஜி கமிஷனருக்கு சிறை தண்டனை ரத்து

Added : டிச 24, 2020
Share
Advertisement
மதுரை : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை மாநகராட்சி முன்னாள் கமிஷனர் அனீஷ் சேகருக்கு சிறை தண்டனை விதித்த தனி நீதிபதியின் உத்தரவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு ரத்து செய்தது. மாநகராட்சியில் பணிபுரியும் உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க 2016 ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை நிறைவேற்ற நடவடிக்கை இல்லை என கமிஷனராக பணிபுரிந்த அனீஷ் சேகருக்கு (தற்போது

மதுரை : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை மாநகராட்சி முன்னாள் கமிஷனர் அனீஷ் சேகருக்கு சிறை தண்டனை விதித்த தனி நீதிபதியின் உத்தரவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு ரத்து செய்தது.

மாநகராட்சியில் பணிபுரியும் உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க 2016 ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை நிறைவேற்ற நடவடிக்கை இல்லை என கமிஷனராக பணிபுரிந்த அனீஷ் சேகருக்கு (தற்போது 'சிப்காட்' செயல் இயக்குனர்) எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விஜயகுமார் என்பவர் தாக்கல் செய்தார். 2019 ல் தனி நீதிபதி, 'நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளதால், அனீஷ் சேகருக்கு ஒருவாரம் சிறை தண்டனை, 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது,' என உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து அனீஷ் சேகர், ''பதவி உயர்வு தொடர்பான வழக்கில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இக்கால கட்டத்தில் அவமதிப்பு வழக்கு நிலுவையில் இருந்தது. தனி நீதிபதியின் உத்தரவை நீதிபதிகள் அமர்வு ரத்து செய்தது. இதை கருத்தில் கொள்ளாமல் அவமதிப்பு வழக்கில் தனி நீதிபதி தண்டனை விதித்தது ஏற்புடையதல்ல. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,'' என உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு, 'தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்கிறோம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X