பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் போர்வையில் வியாபாரிகள்; கலெக்டரிடம் உ.உ.க., புகார் மனு

Added : டிச 24, 2020
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில், விவசாயிகள் என்ற போர்வையில், வியாபாரிகள் காய்கறி வியாபாரம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் குறைகளை கேட்கும் முகாம், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் நேற்று நடந்தது.கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் விஜயகார்த்திகேயன் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள், விவசாயிகளிடம், 'வீடியோ

திருப்பூர் : திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில், விவசாயிகள் என்ற போர்வையில், வியாபாரிகள் காய்கறி வியாபாரம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் குறைகளை கேட்கும் முகாம், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் நேற்று நடந்தது.கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் விஜயகார்த்திகேயன் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள், விவசாயிகளிடம், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் பேசினர்.வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில், அப்பகுதி விவசாயிகள் பங்கேற்று, தங்களது கோரிக்கையை முன்வைத்தனர்.

மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் விவசாயிகள் சங்க தலைவர் பொன்னுசாமி:மங்கலம் கால்நடை மருத்துவமனையில், ஒரு டாக்டர் மட்டும் இருக்கிறார்; பணியாளர் இல்லாததால், கால்நடைகளுக்கு சிகிச்சை பெற தாமதம் ஏற்படுகிறது. தண்ணீர் வசதி இல்லை. பி.ஏ.பி., 3ம் மண்டல பாசன வாய்க்காலை சீரமைக்க வேண்டும்

.உ.உ.க., மாவட்ட செயலாளர் சோமசுந்தரம்:திருப்பூர் தெற்கு உழவர் சந்தை அருகே விவசாயிகளுடன், வியாபாரிகளும் வந்து காய்கறி விற்கின்றனர். சிலருக்கு மட்டும், மின்னணு தராசு வழங்கப்படுகிறது. அனைவருக்கும் வழங்க வேண்டும். மேற்கூரை வசதி அமைத்து கொடுக்க வேண்டும். வாவிபாளையம் செல்லும் ரோட்டில், பழுதடைந்துள்ள பி.ஏ.பி., வாய்க்காலை சீரமைக்க வேண்டும்.

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து:உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க வேண்டும். தாராபுரம் தாலுகா, குள்ளிப்பள்ளம் பகுதியில், விவசாய நிலத்தில் தேங்காய் தொட்டியை எரித்து கார்பன் தயாரிப்பதை தடுக்க வேண்டும். நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும். அவிநாசிபாளையம் கரித்தொட்டி ஆலையை மூட வேண்டும்.இவ்வாறு, விவசாயிகள் தங்களது கோரிக்கை தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X