திருப்பூர் : ''எட்டு மணி நேர வேலைக்கு, குறைந்தபட்ச மாதாந்திர ஊதியமாக, 18 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்,'' என, அனைத்து பனியன் தொழிலாளர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
திருப்பூர் மாவட்ட அனைத்து பனியன் தொழிலாளர் சங்கங்கள், கலெக்டரிடம் நேற்று அளித்த மனு:அதிக நேரம் வேலை வாங்குவதை தடுத்து, எட்டு மணி நேரம் மட்டும் வேலை வழங்க வேண்டும். ஓவர்டைம் வேலைக்கு, இரட்டிப்பு சம்பளம் கொடுக்க வேண்டும். குறைந்தபட்ச மாதாந்திர ஊதியமாக, 18 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.தொழிலாளர் நலச்சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும். 'பீஸ்ரேட்' தொழிலாளருக்கும், போனஸ், ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட சலுகை வழங்க வேண்டும்.
தேசிய பண்டிகை விடுமுறை, வாரவிடுமுறை நாளில், விடுப்பு அளிப்பதை உறுதி செய்ய வேண்டும்.புலம்பெயர்ந்து வரும் தொழிலாளருக்கு, அடையாள அட்டை வழங்க வேண்டும். திருப்பூரில், இ.எஸ்.ஐ., மருத்துவமனை பணிகளை உடனே துவங்க வேண்டும்.தொழிலாளருக்கு, மத்திய அரசு திட்டத்தில் வீட்டு வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். பெண் தொழிலாளர் பணியாற்றும் நிறுவனத்தில், பாலியல் புகார் பெட்டி வைக்க வேண்டும். பாலியல் புகார் கமிட்டி அமைக்க வேண்டும்.இவ்வாறு, அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE