பொது செய்தி

தமிழ்நாடு

அறிவிப்பின்றி ஆதார் முகாம் தெரியப்படுத்த எதிர்பார்ப்பு

Added : டிச 24, 2020
Share
Advertisement
அவிநாசி : அவிநாசி தபால் அலுவலகம் சார்பில், இரண்டு நாள் ஆதார் சிறப்பு முகாம் நடந்தது.அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்டு அருகேயுள்ள, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், தபால் துறை சார்பில், ஆதார் சிறப்பு முகாம் நடந்தது. ஆதார் அட்டையில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, முகவரி மாற்றங்கள் செய்யப்பட்டன.ஆனால், இந்த முகாம் நடத்துவது குறித்து, பொதுமக்கள் யாருக்கும் தெரியவில்லை. விவரம்

அவிநாசி : அவிநாசி தபால் அலுவலகம் சார்பில், இரண்டு நாள் ஆதார் சிறப்பு முகாம் நடந்தது.அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்டு அருகேயுள்ள, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், தபால் துறை சார்பில், ஆதார் சிறப்பு முகாம் நடந்தது.

ஆதார் அட்டையில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, முகவரி மாற்றங்கள் செய்யப்பட்டன.ஆனால், இந்த முகாம் நடத்துவது குறித்து, பொதுமக்கள் யாருக்கும் தெரியவில்லை. விவரம் அறிந்தவர்கள் மட்டும் அங்கு சென்று, ஆதார் சார்ந்த பணிகளை செய்து கொண்டனர். தினமும், 20 பேருக்கு மட்டுமே, ஆதார் சார்ந்த பணிகளை செய்ய முடியும் என்ற நிலையில் தான் தொழில்நுட்ப வசதி உள்ள நிலையில், முன்கூட்டியே முகாம் நடப்பது குறித்து தெரிவித்திருந்தால், பயனுள்ளதாக இருந்திருக்கும்.

அவிநாசியை பொருத்தவரை தினமும், நுாற்றுக்கும் மேற்பட்டோர் ஆதார் தொடர்பான பணிகளை மேற்கொள்ள அரசு இ-சேவை மற்றும் பாரத ஸ்டேட் வங்கிக்கு செல்கின்றனர்.இதற்காக, ஒரு நாள் முழுக்க செலவிட வேண்டியுள்ளது. எனவே, அவிநாசியில் கூடுதலாக ஆதார் சேவை மையம் அமைக்க வேண்டும். அவ்வப்போது முன்னறிவிப்புடன் கூடிய சிறப்பு முகாம் நடத்தி, இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X