திருப்பூர் : திண்டுக்கல், வேடச்சந்துாரை சேர்ந்தவர் சக்தி முருகன், 45; டிரைவர். கடந்த, 2007ல், திருப்பூரில் தங்கி, பனியன் நிறுவனங்களுக்கு நுால் சப்ளை செய்யும் வாகனத்தின், டிரைவாக வேலை பார்த்து வந்தார்.மங்கலம் பகுதியில் பனியன் நிறுவனத்துக்கு விநியோகம் செய்யப்பட வேண்டிய, 18 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நுாலை திருடினர். இதுகுறித்து புகாரின் பேரில், மங்கலம் போலீசார் சக்தி முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.ஜாமீனிலில் வெளியே வந்த அவர் கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். அவருக்கு பிடிவாரண்ட் வழங்கப்பட்டது. தலைமறைவாக இருந்த சக்தி முருகனை மங்கலம் போலீசார், நேற்று கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE