பொது செய்தி

தமிழ்நாடு

'லாரிகள் இயக்கப்படும்' சம்மேளனம் அறிவிப்பு

Added : டிச 24, 2020
Share
Advertisement
திருப்பூர் : 'வேலை நிறுத்த போராட்டத்தில், மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் பங்கேற்காது; லாரிகள் வழக்கம் போல் ஓடும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.'வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது, பிரதிபலிப்பு ஸ்டிக்கர் ஓட்டும் விஷயத்தில் மாறுபடும் உத்தரவு, ஜி.பி.எஸ்., கருவி கட்டாயம்,' உட்பட போக்குவரத்து துறை அறிவிப்புகளை திரும்ப பெற வலியுறுத்தி, அகில இந்திய மோட்டார் காங்., தமிழக

திருப்பூர் : 'வேலை நிறுத்த போராட்டத்தில், மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் பங்கேற்காது; லாரிகள் வழக்கம் போல் ஓடும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

'வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது, பிரதிபலிப்பு ஸ்டிக்கர் ஓட்டும் விஷயத்தில் மாறுபடும் உத்தரவு, ஜி.பி.எஸ்., கருவி கட்டாயம்,' உட்பட போக்குவரத்து துறை அறிவிப்புகளை திரும்ப பெற வலியுறுத்தி, அகில இந்திய மோட்டார் காங்., தமிழக லாரி உரிமையாளர் சம்மேளனம் சார்பில் வரும், 27 தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில், 8,000 லாரிகளும், நகரில், 3,000 லாரிகளும் பங்கேற்கும் என லாரி உரிமையாளர் சங்க மாவட்ட தலைவர் சின்னசாமி தெரிவித்திருந்தார். தற்போது, 'பிரதிபலிப்பு ஸ்டிக்கர் உத்தரவை திரும்ப பெறுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் அறிவிப்பை ஏற்று, வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க போவதில்லைஎன மாநில தலைமை அறிவித்துள்ளது. இதனால், வழக்கம் போல் லாரிகள் இயங்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X