பொது செய்தி

தமிழ்நாடு

வைகுண்ட ஏகாதசி விழா; கோவிலில் ஏற்பாடு தீவிரம்

Added : டிச 24, 2020
Share
Advertisement
திருப்பூர் : வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், பரமபத வாசல் அலங்காரப்பணி துவங்கியுள்ளது.வைகுண்ட ஏகாதசி நாளில், ஸ்ரீவீரராகவப்பெருமாள், கருடவாகனத்தில் எழுந்தருளி, பரமபத வாசல் வழியாக சென்று, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவையொட்டி, நாளை காலை, பரமதவாசலில் பிரவேசித்து, நம் பெருமாள் அருள்பாலிக்கிறார்.கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால்,

திருப்பூர் : வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், பரமபத வாசல் அலங்காரப்பணி துவங்கியுள்ளது.

வைகுண்ட ஏகாதசி நாளில், ஸ்ரீவீரராகவப்பெருமாள், கருடவாகனத்தில் எழுந்தருளி, பரமபத வாசல் வழியாக சென்று, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவையொட்டி, நாளை காலை, பரமதவாசலில் பிரவேசித்து, நம் பெருமாள் அருள்பாலிக்கிறார்.கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், பரமபத வாசல் திறப்பு விழா நிகழ்வுகளில், பக்தர்களுக்கு அனுமதியில்லை.

காலை, 6:30 மணிக்கு பின்னரே, பக்தர்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது.விழாவையொட்டி, கோவில் வளாகம் சுத்தம் செய்யும் பணி நேற்று நடந்தது. பக்தர்கள் வரிசையில் சென்று தரிசனம் செய்யவும், தடுப்புகள் அமைத்து, சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீவாரி டிரஸ்ட் சார்பில், சுவாமி அலங்காரம் மற்றும் பரமபத வாசல் அலங்காரப்பணி துவங்கியுள்ளது.

இதேபோல், அவிநாசியிலுள்ள கரிவரதராஜ பெருமாள் கோவில், மொண்டிபாளையம் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில், கருவலுார் வேணுகோபாலசுவாமி கோவில், தாளக்கரை, ஸ்ரீ லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில், கொடுவாய் விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில், கோவில் வழி பெரும்பண்ணை ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில் உட்பட மாவட்டத்திலுள்ள அனைத்து பெருமாள் கோவிலிலும், வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X