திருப்பூர் : காமராஜரை கலங்கப்படுத்தும் கமல் கட்சியினரை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி, பனங்காட்டுப்படை கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மக்கள் நீதி மையம் நிறுவனர் கமலை, 'காமராஜரே' என்று குறிப்பிட்டு, பேனர் வைத்ததை கண்டித்து, திருப்பூரில் பனங்காட்டுப்படை கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாநில துணை பொது செயலாளர் இமானுவேல் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட செயலாளர் ஜெகதீஷ், வடக்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், புறநகர் மாநகர் மாவட்ட செயலாளர் செல்வதிருமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். காமராஜர் பெயரை களங்கப்படுத்தும் வகையில் செயல்படும் கமல் கட்சியினரை கைது செய்ய வேண்டுமென, எஸ்.பி., அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE