பொது செய்தி

தமிழ்நாடு

வசதியில்லாத வாரச்சந்தை; வியாபாரிகள் புகார் வாசிப்பு

Added : டிச 24, 2020
Share
Advertisement
வெள்ளகோவில் : வெள்ளகோவில் வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் எதுவுமில்லை என, வியாபாரிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.வெள்ளகோவில் வாரந்தோறும் ஞாயிறன்று வாரச்சந்தை கூடுவதால், சனிக்கிழமை இரவே மொத்த வியாபாரிகள், காய்களோடு வந்து விடுகின்றனர். காலை, 7:00 முதல் இரவு, 7:00 மணி வரை ஆயிரக்கணக்கானோர் காய்கறி வாங்கி செல்கின்றனர்.வாரச்சந்தை வெட்டவெளியில், குறுக்கும் மறுக்குமாக சாலைகளில்

வெள்ளகோவில் : வெள்ளகோவில் வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் எதுவுமில்லை என, வியாபாரிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

வெள்ளகோவில் வாரந்தோறும் ஞாயிறன்று வாரச்சந்தை கூடுவதால், சனிக்கிழமை இரவே மொத்த வியாபாரிகள், காய்களோடு வந்து விடுகின்றனர். காலை, 7:00 முதல் இரவு, 7:00 மணி வரை ஆயிரக்கணக்கானோர் காய்கறி வாங்கி செல்கின்றனர்.வாரச்சந்தை வெட்டவெளியில், குறுக்கும் மறுக்குமாக சாலைகளில் ஆங்காங்கே, 300க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்படுகிறது.ஒரு சிலர் நடக்கும் பாதையிலும் கடை வைப்பதால், பொதுமக்கள் நடக்க சிரமப்படுகின்றனர்.இதுதவிர, சந்தைக்கு வெளியே முத்துார் ரோடு தார் சாலையில், 90-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்படுகிறது.

சந்தையில் கடை வைக்கும் அனைவரிடமும் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அடிப்படை வசதி எதையும் செய்து தருவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.வியாபாரிகள் கூறியதாவது:வாரச்சந்தையில் குடிநீர், கழிப்பிடம், மின் விளக்கு வசதியில்லை. கான்கிரீட் அல்லது தார்சாலை, வரிசையாக பிளாட்பார்ம் அமைத்து கட்டடம் கட்டி, கூரை அமைத்து தரவேண்டும்.கூரை இல்லாததால், மழை மற்றும் வெயி லில் சிரமப்படுகிறோம். எனவே, அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்து தரவேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X