சென்னை:பிரதமர் நரேந்திர மோடி, நாளை உரையாற்ற உள்ளார். தமிழகம் முழுதும், முக்கிய இடங்களில் ஒளிபரப்ப, தமிழக பா.ஜ., நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக, தமிழக பா.ஜ., ஊடகப் பிரிவு தலைவர் பிரசாத் அறிக்கை:மறைந்த பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளான, டிச., 25, ஒவ்வொரு ஆண்டும் நல்லாட்சி தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாளை பிரதமர் நரேந்திர மோடி, பகல், 12:00 மணிக்கு, விவசாய கவுரவ நிதித் தவணை, 18 ஆயிரம் கோடி ரூபாயை, 9 கோடி விவசாய குடும்பங்களின் வங்கி கணக்கில் ஒப்படைத்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக உரையாற்ற உள்ளார்.
நாடு முழுதும் நடக்கும் நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள், தேசியத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். சென்னையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், மாநிலத் தலைவர் முருகன் தலைமையில் மறைமலை நகரில் நடக்க உள்ள, விவசாயிகள் கூட்டத்தில், காலை, 11:00 மணிக்கு உரையாற்ற உள்ளார். பா.ஜ., சார்பில், அனைத்து மண்டலங்களிலும், பிரதமர் உரையை ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில், விவசாயிகள், விவசாயிகள் சங்கத் தலைவர்கள், பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE