திருப்பூர் : திருப்பூர் மாவட்ட தொழிலாளர் துறை உதவி கமிஷனர் (அமலாக்கம்) மலர்கொடி அறிக்கை:தொழிலாளர் நல நிதிச் சட்டம் 1972, பிரிவு 2 டி இன் படி, தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், ஐந்து மற்றும் அதற்கு மேற்பட்ட தொழிலாளர் பணிபுரியும் கடை, ஓட்டல் தொழிலாளர் பங்களிப்பாக, 10 ரூபாய்; வேலை அளிப்பவர் பங்களிப்பாக 20 ரூபாய் என, மொத்தம் 30 ரூபாயை, தொழிலளர் நல நிதி பங்கு தொகையாக செலுத்தவேண்டும்
அதன்படி, 2020ம் ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதியை, நிறுவனங்கள், 2021, ஜன., 31க்குள், நல வாரியத்தில் செலுத்தவேண்டும். நிறுவனங்கள் எளிதாக தொழிலாளர் நல நிதி செலுத்துவதற்காக, www.lwb.tn.gov.in இணை யதளம் உருவாக்கப்பட்டுள்ளது.செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், டி.எம்.எஸ்., வளாகம், தேனாம்பேட்டை, சென்னை 600 006 என்கிற முகவரிக்கு, வங்கிவரைவோலையாக,வரும் ஜன., 31க்குள் அனுப்பி வைக்கலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE