பொது செய்தி

தமிழ்நாடு

பி.ஏ.பி., திட்டத்தில் நீர் பங்கீடு

Added : டிச 24, 2020
Share
Advertisement
கோவை:தமிழக - கேரள மாநிலங்களுக்கு இடையே, முல்லை பெரியாறு, பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தில் ஒப்பந்தம் புதுப்பித்தல், நீர் பங்கீடு, சிறுவாணி அணை பிரச்னை, பாண்டியாறு -புன்னம்புழா திட்டம் உள்ளிட்ட பல்வேறு நீராதார பிரச்னைகள் இருக்கின்றன. இதில், பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தில், தமிழகம் - கேரளா மாநிலங்களுக்கு இடையேயான நீர் பங்கீடு தொடர்பாக, ஆறு மாதத்துக்கு ஒரு

கோவை:தமிழக - கேரள மாநிலங்களுக்கு இடையே, முல்லை பெரியாறு, பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தில் ஒப்பந்தம் புதுப்பித்தல், நீர் பங்கீடு, சிறுவாணி அணை பிரச்னை, பாண்டியாறு -புன்னம்புழா திட்டம் உள்ளிட்ட பல்வேறு நீராதார பிரச்னைகள் இருக்கின்றன.

இதில், பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தில், தமிழகம் - கேரளா மாநிலங்களுக்கு இடையேயான நீர் பங்கீடு தொடர்பாக, ஆறு மாதத்துக்கு ஒரு முறை கூட்டாய்வு கூட்டம் நடத்துவது வழக்கம்.கடந்த முறை, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்தது. நேற்று, கோவை - அவிநாசி ரோட்டில் உள்ள ஓட்டலில் நடத்தப்பட்டது.

தமிழக பொதுப்பணித்துறை சார்பில், தலைமை பொறியாளர் விஸ்வநாத், கண்காணிப்பு பொறியாளர்கள் முத்துசாமி, சிவலிங்கம், கேரள நீர்ப்பாசன துறை தலைவர் அலேக் வர்க்கீஸ், அதிகாரிகள் சிவதாசன், பினு ஜெயக்குமார் பங்கேற்றனர்.ஒப்பந்தப்படி, ஆழியாறு அணையில் இருந்து, ஆண்டுக்கு, 7.25 டி.எம்.சி., சோலையாறு அணையில் இருந்து, 12.3 டி.எம்.சி., தண்ணீர் வழங்குவது தொடர்பாக பேசப்பட்டது. காலை, 11:00 மணிக்கு துவங்கிய கூட்டம், இரவு, 9:00 மணி வரை நீடித்தது.

இதுவரை வழங்கிய தண்ணீர் அளவு, இன்னும் வழங்க வேண்டிய அளவு, அணையில் தற்போதையஇருப்பு, மழைப்பொழிவு, பாசனத்துக்கு தேவையான தண்ணீர் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. கேரளா தரப்பில், ஒப்பந்தத்தை விட கூடுதலாக தண்ணீர் கேட்கப்பட்டதால், பேச்சு நீடித்துக் கொண்டே இருந்தது. பேச்சு சுமுகமாக நடந்தாலும், இறுதி முடிவு எட்டுவதில் தாமதம் ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X