சென்னை:'எஸ்றா சற்குணம் மீது, காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:அரசியல் புரோக்கராக செயல்படும் எஸ்றா சற்குணம், மதத் தலைவர் என்ற பெயரில், மக்களை ஏமாற்றி, தி.மு.க.,வின் கைக்கூலியாக செயல் படுகிறார் என்பது, தமிழக மக்களுக்கு தெரியும். உத்தமத் தலைவர் பிரதமர் நரேந்திரமோடியை, குள்ளநரி விமர்சிப்பது வேடிக்கையானது. பிரதமரை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை, எவரும் ஏற்க மாட்டார்கள். தி.மு.க., தலைவரை திருப்திபடுத்த, எங்கள் தலைவரை ஒருமையில் பேசுவதை ஏற்க முடியாது.
அதேபோல், ஹிந்து சமுதாய மக்களை, பழக்க வழக்கங்களை, எஸ்ரா சற்குணம் பலமுறை பழித்து பேசியுள்ளார். பொது அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் வகையில், அவர் தொடர்ந்து பேசி வருகிறார். அவர் மீது, காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களை திருப்திபடுத்துவதற்காக, எஸ்றா சற்குணம் போன்றோர் தரம் தாழ்ந்து பேசுவதை, மேடையில் அமர்ந்திருந்ததலைவர்களும், வேடிக்கை பார்த்தது வேதனையானது.
எஸ்றா போன்றோர் நடவடிக்கையை, மக்கள் உன்னிப்பாக பார்க்கின்றனர். இவர்களின் மதம் சார்ந்த, ஒரு தலைபட்சமான விமர்சனங்களையும், மக்கள் பார்த்து வருகின்றனர். இவற்றுக்கெல்லாம் சேர்த்து, மக்கள் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவர். இவ்வாறு, முருகன் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE