அரசியல் செய்தி

தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்., நல்லாட்சி வழங்கவில்லையாம்!: 'காமெடி' சீமானின் அடுத்த 'குபீர்' இது!

Added : டிச 24, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை:''எம்.ஜி.ஆரை, 100 சதவீதம் மதித்தாலும், அவர் நல்லாட்சி வழங்கவில்லை. ரஜினி, கமலுக்கு பாடம் புகட்டுவதன் வாயிலாக, இனி எந்த நடிகரும் அரசியலுக்கு வரக்கூடாது,'' என, நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்; தானும் ஒரு நடிகராக இருந்தவர் என்பதைச் சொல்லி சப்பைக்கட்டு கட்டியது, கடும் சிரிப்பை ஏற்படுத்தியது.'தன்னைக் கேட்டு தான், மறைந்த

சென்னை:''எம்.ஜி.ஆரை, 100 சதவீதம் மதித்தாலும், அவர் நல்லாட்சி வழங்கவில்லை. ரஜினி, கமலுக்கு பாடம் புகட்டுவதன் வாயிலாக, இனி எந்த நடிகரும் அரசியலுக்கு வரக்கூடாது,'' என, நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்; தானும் ஒரு நடிகராக இருந்தவர் என்பதைச் சொல்லி சப்பைக்கட்டு கட்டியது, கடும் சிரிப்பை ஏற்படுத்தியது.

'தன்னைக் கேட்டு தான், மறைந்த எஸ்.பி.பி., இலங்கை சென்றார்' என, சில மாதங்களுக்கு முன் சீமான் சொன்ன போது எழுந்த சிரிப்பலை அடங்குவதற்குள், தற்போது அவர் மீண்டும் ஒரு, 'காமெடி'யை அவிழ்த்து விட்டுள்ளார்.இலங்கை தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து, 2010ல் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், சீமான் பங்கேற்று பேசினார்.அனுமதி அளித்த நேரத்தை விட, அதிக நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும், அந்தக் கூட்டத்தில், சட்டத்துக்கு புறம்பான வகையில் பேசியதாகவும், சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு, மாஜிஸ்திரேட் ஜெயசுதாமுன், விசாரணைக்கு வந்தது.அப்போது, நீதிமன்றத்தில் சீமான் ஆஜரானார். இதையடுத்து, ஜன., 5க்கு விசாரண தள்ளி வைக்கப்பட்டது.நடித்தால் மட்டும்...அதன்பின், சீமான் அளித்த பேட்டி:

நடிகர் ரஜினியின் திரைப்படங்களை யாரும் குறை கூறுவதில்லை. அரசியலில் தமிழர்களுக்கு ஒரு கோட்பாடு உண்டு. வரலாற்றில் அடிபட்டு வீழ்ந்த இனம், மீண்டு எழும்போது, எங்கிருந்தோ வந்தவன் வழி நடத்துவதை ஏற்க முடியாது.'நிலமே எங்கள் உரிமை' என, ரஜினி திரைப்படத்தில் சொன்னதையே நாங்களும் சொல்கிறோம். கமலும், ரஜினி யும், எம்.ஜி.ஆர்., குறித்து பேசி, அ.தி.மு.க.,வின் ஓட்டு சேகரிப்பாளர்களாக உள்ளனர்.

எம்.ஜி.ஆர்., பிரபாகரனை தன் மகன் போல நேசித்தார்; தனி ஈழத்தை ஆதரித்தார். ரஜினி, கமல் ஆகியோருக்கு, ஈழம் பற்றிய நிலைப்பாடு என்ன? தமிழர் இன வரலாறு தெரியாத அவர்கள், இந்த இனத்தை எப்படி வழி நடத்துவர்?ரஜினி, கமலுக்கு பாடம் புகட்டுவதன் வாயிலாக, எந்த நடிகரும் இனி அரசியலுக்கு வரக்கூடாது. நடித்தால் மட்டும், நாடாளும் தகுதி வந்துவிடும் என்ற எண்ணம் மாற வேண்டும்.நான் சினிமாவில் இருந்து வந்தவன் என்றாலும், ரசிகர்களை சந்திக்கவில்லை; மக்களை சந்தித்தேன். பிரபாகரன் மீது பற்று கொண்டதால், 100 சதவீதம் எம்.ஜி.ஆரை மதிக்கிறோம்; ஆனால், அவர் நல்லாட்சி வழங்கவில்லை.

ஆங்கில கல்வியை கொண்டு வந்தது; மாநில பட்டியலில் இருந்த கல்வியை, தேசிய பட்டியலுக்கு மாற்ற அனுமதித்தது; முல்லை பெரியாறு அணை உரிமையை, கேரளாவிற்கு தாரை வார்த்தது என, பல தவறான செயல்களை எம்.ஜி.ஆர்., செய்தார்.

சட்டசபை தேர்தலில், நாம் தமிழர் கட்சி, தனித்து போட்டியிடும்.இவ்வாறு, அவர் கூறினார்.இவர் இப்படிப் பேசியதை நினைத்து மக்கள் வயிறு குலுங்கச் சிரிக்கின்றனர். 'எஸ்.பி.பி.,யைப் பற்றிப் பேசியபோதே, 'குபீர்' சிரிப்பு வந்தது. இப்போது, எம்.ஜி.ஆரையும் தன் கணக்கில் இழுத்து விட்டவருக்கு, எந்த, 'மக்கள்' ஓட்டு போடப் போகின்றனரோ...' என, பலரும், 'கமென்ட்' அடிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopalu -  ( Posted via: Dinamalar Android App )
24-டிச-202020:54:48 IST Report Abuse
Gopalu எப்பா யாராவது எம்ஜிஆரின் சாதனைகளை சொல்லுங்களேம்பா
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
24-டிச-202011:57:06 IST Report Abuse
Bhaskaran தன் கூடஇருந்தவர்களை சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மருத்துவக் கல்லூரிகள் ஆரம்பிக்க துணை செய்து அவர்களை கல்வி தந்தைகள் ஆக்கியவர் எம்ஜியார்
Rate this:
Cancel
Ganesan - Karaikudi,இந்தியா
24-டிச-202011:23:21 IST Report Abuse
Ganesan உண்மை தான். எம்.ஜி.ஆரின் சிறப்பு, சும்மா சும்மா சொல்லக்கூடாது. சினிமாவில் நடித்து புகழ் சேர்த்தார். நானும் எம்.ஜி.ஆர்.ரின் ரசிகன் தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X